Tuesday, August 3, 2010

அவள் அப்படியல்ல

என் கல்லூரி நாட்களில், அறிவியல் மாணவன் என்பதால் ஆய்வுகூடங்கள்ல வாரத்தில் பாதி நேர கழிக்க வேண்டியிருக்கும்.
எங்கள் கல்லூரியில் இளங்கலையில் மாணவர்கள் மட்டும் தான். மாணவிகள் என் வகுப்பில் இல்லை.

" ஓன்லி ஜென்ட்ஸ் " அப்படி ஒரு க்ளிஷே எங்களுக்கு பொருந்தும்.

ஆய்வுகூடங்கள்ல எங்களுக்கு குறைஞ்சது 4-6 மணி நேரம் தேவைப்படும். ரிசல்ட் கொண்டு வர . இதுல மொத்த நேரமே 4 மணி நேரம்தான்
இதில் வேடிக்கை என்னன்னா பாதி நேரம் சில ஆசிரியர் எங்களுக்கு நல்ல விஷயம் சொல்றதா நினைச்சிகிட்டு பாதி நேரத்தில கருத்துரை வழங்கிடுவாங்க.

எங்க விட்டாலும் கடைசியா " ரிசல்ட் கொண்டு வந்துருங்க " அப்படின்னு கூலா சொல்லிட்டு போயிடுவாங்க.
ஆனா இந்த மாதிரி கருத்து பேசும் போது ஓவ்வொருத்தரும் ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணிவோம்,

ஆனா அன்னைக்கு ஒரு நாள் ஆசிரியர் தன்னோட ஒரு கருத்த சொன்னார். எங்க வகுப்புல இருக்க  எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் ரியாக்ட் பண்ணினாங்க இன்னும் சொல்ல போனா என்னோட juniors கூட அப்படித்தான் ரியாக்ட் பண்ணினாங்க.

அப்படி அவர் என்ன சொன்னார்னா அவர் தன்னோட மனைவியை விட இறைவனை தான் அதிகமாக நம்புவதாக சொன்னார்.
அவர் சொன்ன கருத்துக்கு பயங்கரமான கண்டனம் எல்லாரிடமும் ஒருமித்து இருந்தது.
இந்த கருத்தோ , நம்பிக்கையோ நல்லோழுக்கங்கள், மானம், வீரம் இவற்றிற்கு இழுக்கு என்று கருதினோம்.

அப்பொழுது அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட .ஆனால் இப்பொழுது சிந்தனை வேறாக இருக்கிறது.

சாதாரணமாக இறைமறுப்பாளரின் பார்வையில் பார்க்கும் போது உருவாகும் கருத்துக்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
மூன்றாம் தர இறைமறுப்பாளர்கள் ஏதோ இறை நம்பிக்கை உள்ளவர்கள் அறிவில்லாதவர் என்று நினைத்து கொண்டு பேசுவாங்க.கேட்டால் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போர்க்கொடி அப்படிம்பாங்க. Fantasy க்கு I Believe in No God and No God is Universal இப்படி தத்துவம் பேசுவாங்க.
இதே போல இறை நம்பிக்கை உள்ளவர்களிடமும் ஒரு fantasy உண்டு.

அடுத்தவன நிர்ணயிக்கறதிக்கே ஒரு கூட்டம் இல்ல இல்ல பல கூட்டம் இருக்கு.
நான் இதப்பத்தி பேசுனா ரெண்டு கூட்டத்துல ஏதாவது ஒண்ணுல என்ன சேர்த்துவாங்க. எனக்கு
இறைமறுப்பாளர் பார்வை வேண்டாம், இறைநம்பிக்கையுடைவர் பார்வையும் வேண்டாம்.

அவர் சொன்ன அந்த கருத்த நானும் எதிர்த்தேன்.
இப்ப மாத்தி யோசிக்க நினைக்கிறேன்.
இந்த கருத்த நம்மல்ல பெரும்பாண்மையானவங்க எதிர்ப்போம். ஏன்னா மனைவி என்பவள் கற்பு. என்பதனை காத்து நம்ம கலாச்சாரம்...கலாச்சாரம் சொல்லற ஒன்ன காப்பாத்தறா அப்படின்றோம்.

இதவே அந்த கருத்தை கொஞ்சம் மாற்றி காதலிகளை இல்ல பெண்கள நம்ப கூடாது என்று சொன்னால் இதற்கு முன் சொன்ன க்ருத்துக்கு கண்டனம் தந்தவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பார்களா என்றால் சந்தேகம் தான்.
பலருக்கு தான் காதலிக்கும் பெண் எப்போதும் தன் பக்கம் நிற்பாள் என்பது சந்தேகம்தான்.
" கொஞ்ச அப்பா அம்மா கண்ண கசக்குனா நம்மள விட்டுருவாபா". இதை பலர் என்னிடம் சொல்ல கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம்.

கிறுக்குத்தனமான பழமொழி சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பொண்ணை நம்பாதே. என்ன ஒரு இடியாட்டிக்கான சிந்தனை
இப்பொழுது காதலிகள நம்பக் கூடாது எங்கிற
இந்த கருத்து மிகப்பெரிய விகர்ப்பானதாக யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் இருந்தும் மனைவியும் ஒரு பெண் , காதலியும் ஒரு பெண்.
ஒரு பெண் சமூகம் தரும் அங்கீகாரம் கிடைத்த பின் நம்பத்தகுந்தவள் ஆகிறாள் இன்னும் சொல்லப் போனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செல்கிறாள்.
அப்படி சந்தேகப்படுபவன் காப்பியங்களில் வரும் கடவுளாக இருந்தால் கூட நாம் சிறிதும் கூட அஞ்சாமல் விமரிசிப்போம் .
அப்படி இல்லாதவர் நம்பத்தகுந்தவர் இல்லாமல் போக நேரிடுகிறது சில நேரங்களில்.

காதலிக்கும் மனைவிக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது ? மாங்கல்யக் கயிறு.
எல்லாரையும் நம்புங்கள் என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் இந்த தாலி யாருக்கோ வாரண்டி கார்டு போல் இந்த மனிதர்களையும் தாண்டி நிற்கிறது.


அப்ப மாங்கல்யம் வேண்டாமா என்றால் அது அவரவர் விருப்பம் நான் இங்கே சொல்ல வருவது ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு பாட்டி, ஒரு அத்தை, ஒரு சித்தி என்று இந்த உறவுகளில் ஒரு நம்பிக்கையுள்ளவள் ஆகிறாள்.

இன்னும் சொல்லப்போனால் அவள் ஏன் ஒரு ஆணுக்கு மட்டும் நம்பிக்கையுடைவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறோம்.
எனக்கு இப்படி மேலே எழுதிய வரிகள் கூட எனக்கு சிறிது Male chauvnisடிக் தோணியை தருகிறது என்று தோண்றுகிறது.
ஆனால் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா இல்லை இதற்கு ஆண்களுக்கு கல்வி தரவேண்டுமா நம்மை சுற்றிய சமூகப் பார்வைக்கு ஒரு மாற்று பார்வை தர வேண்டுமா இல்லை ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் வேலையிலும் உறவுகளிலும் உண்மையான அன்பையும் நேர்மையும் தர தயார்படுத்த வேண்டுமா ?

எனக்கு தெரியவில்லை இது பல விடை இருக்கும் கணக்கு போல இருந்தும் எனக்கு இதில் ஒரு விடை கூட எனக்கு புலப்படவில்லை. 
இது எண்ணங்களின் சிதறல்கள்...

Monday, June 28, 2010

இளமையாகவே இருப்பாய்

7.6.2010 அன்று காலை 2 மணி 50 நிமிடங்கள் இருக்கும் , என் செல்பேசி பாடல் " Main hoon don  " ஒலித்தது,
என் நண்பன் ரமேஷ் பாபு அழைத்தான். எரிச்சலோடு பேச முனைந்தேன்.

ரமேஷ் " எங்கடா இருக்க ?" கேட்டான்.

"இப்ப எங்கடா இருப்பேன் ? வீட்ல தான் "ன்னு சொன்னேன்.

ரமேஷ் " அஜய் செத்திட்டான்டா " அப்படின்னு சொல்லிட்டு வச்சிட்டான்.

ஏன் ? எப்படி ? கேட்டதுக்கு ஏதோ மின்சார விபத்து சொன்னான்.

அப்போது தண்ணீரிலிருந்து அவனுக்கு மின்சாரம் அவன் உடலுக்கு பாய்ந்ததாக கேள்வி.
6.6.2010 அன்று அவன் உயிர் பிரிந்திரிக்கிறது
அந்த விபத்தை பற்றி என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.
அஜயின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது.
அஜயிக்கு 21 வயது தான் இருக்கும். நானும் அவனும் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் படித்தோம்.அந்த நாட்களில் நானும் அவனும் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தோம்.
ஆனால் அவனது கடைசி நாட்களில் நானும் அவனும் அவ்வளவு நெருக்கமல்ல.
........
பள்ளியில் prayer ல உயரப்படி நிற்கவைப்பாங்க, அதனால அவந்தான் முதல்ல நிப்பான், அவனுக்கு அப்புறம் நான் நிப்பேன். அவன் முதல்ல நிக்கிறது தன்னோட உயரத்தை கேலி செய்வதாக அவன் உணர்ந்தான், அப்போது. எனக்கும் அவனுக்கும் முதலில் நிற்க கூடாது என்பதில் ஒரு சின்ன போட்டியே நடக்கும்.பெரும்பாலான நேரங்களில் நானே ஜெயித்து அவனை முதலில் நிப்பாட்டி இருக்கிறேன்.

கீழே prayer முடிந்ததும் மேலே மாடியில் வகுப்புக்கு செல்வோம்.கீழே வெயிலில் வேர்த்துக் கொண்டிருக்கும் வேகமாக படியில் ஏறுவோம், எதற்கு என்றால் நானும் அவனும் படித்த ஆறாவது வகுப்பு அறையில் பயிலும் போதெல்லாம் அந்த ஜன்னல் ஓரமாக தான் நானும் அவனும் உட்கார்ந்திருப்போம்,
அந்த ஜன்னல் வழியே 'ஜில்'லன்ற காற்று வரும். வெயிலின் வேர்வைக்கு இதமாக அந்த ஜன்னல் ஒரமான இடத்திற்கு போட்டி போடுவோம்.என் வகுப்பு ஆசிரியை யார் யார் எங்கு அமர வேண்டும் உறுதி செய்வார். இதிலும் பல சமயம் நான் தான் ஜன்னல் பக்கம் அமருவேன்.

அப்புறம் ஒரு தடவை விளையாட்டு போட்டியில் நானும் அவனும் சேர்ந்து ஒரு பந்தை நெற்றியில் வைத்துக் கொண்டு வேகமாக ஓடி பரிசு வாங்கினோம்.
இவ்வாறு அவனோடு எனக்கு இருந்த நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது ....

ஆனால் நானும் அவனும் +2 படிப்பும், கல்லூரி படிப்பும் வெவ்வேறு இடங்களில் படித்தோம்.
எப்போதாவது பார்த்துப் பேசிக் கொள்வோம்.

ஆனால் அவன் என்னோடு பேசிய காலங்களை வைத்தும் பேசிய விசயங்களை வைத்தும் அவனிடம் ஒரு insecurity இருந்திருக்கும் என்று இப்பொழுது உணருகிறேன். ஆனால் அவன் எப்போழுது ஆளுமை செய்வதில் மிக கவனம் செலுத்துவான்.
இன்னும் சரியாக சொன்னால் தன்னை தாழ்வாகவோ, பொருட்டாக எண்ணாமல் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அவன் இருந்த காலங்களில் அவன் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட அவன் விட்டு சென்ற இடம் பன்மடங்கு ஏற்படுத்திவிட்டது. அவன் இறந்தபிந்தான் அவன் செய்த சின்ன தவறுகள் கூட நினைவுகளாயின, அவன் அடித்த ஜோக்குகள் மீண்டும் மீண்டும் சொல்லும் போது அவன் இருக்கிறானோ என்றுகூட தோண்றியது.

இல்லாமையும் மேன்மை தருகிறது இங்கே.


"நண்பா, எங்களுக்கு என்றோ தெரியவில்லை
ஒரு வேளை நரம்பு தளர்ந்து சாகும் நேரம் வந்தால்கூட
 நாங்கள் மூத்திருந்து, தலை நரைத்திருந்தாலும்
எங்கள் நினைவுகளில் வாழும் நீ இளமையாகவே இருப்பாய்
எங்களுடன் "


 


மரணங்களில் என்றும் கண்களில் கண்ணீர் வந்தது இல்லை.
அன்றும் வரவில்லை.
ஆனால் அவனிடம் ஒரு தடவையாவது பேசியிருக்கலாமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன்.


அன்று தான் ஆட்டோகிராபில் வந்த  " முதன் முதல் அழுகை சினேகிதன் மரணம் " என்ற வரியின் கணம் புரிந்தது.

யாரையாவது இழந்தால்தான் நாம் ரொம்ப தத்துவமாக யோசிக்க, பேச ஆரம்பிக்கிறோம்.
நான் இந்த பதிவு செய்ய ஒரு மாதம் எடுத்ததற்கு காரணம் அதுதான்....

Tuesday, May 18, 2010

ராட்டினம்

தொலைக்காட்சியில் அந்த தீம்ப் பார்கின் விள்ம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
Giant Wheel, Roller Coaster  அப்புறம் இன்னும் எவ்வளவோ காண்பிக்க ,
நான் இந்த மாதிரி இடங்களுக்கு பள்ளியில் செல்ல எவ்வளவோ முறை வாய்ப்பு வந்த போது நான் தவிர்த்தே வந்தேன்.

எனக்கு ஒரு 7 வயது இருக்கும். அப்ப எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஒரு சின்ன கோவில்ல சின்ன ராட்டினம் கொண்டு வந்திருந்தாங்க. அந்த ராட்டினம் ரொம்ப பெரிசில்லாம் இல்ல.
அதுல இருந்த இருக்கை தொட்டில் போல் இருந்தது, ஒவ்வொரு இருக்கையிலையும் ரெண்டு பேர் இருக்கலாம்.

அனுமதி கட்டணம் 25 பைசா. எங்கிட்ட காசு வேற இல்ல.
அந்த ராட்டினத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். ராடினத்த ஓட்டிட்டு வந்த அந்த தாத்தா ஒரு சில இருக்கையில ஆட்கள் இல்லன்னு balance க்கு வேடிக்கை பார்த்துகிட்டிருந்த என்ன பார்த்து "ஏறிக்கிறியா" ன்னு கேட்டார். " என்கிட்ட காசு இல்ல " அப்படின்னே ,
 அவரு ஒண்ணு சொல்லாம என்ன தூக்கி ஒரு இருக்கையில உக்கார வச்சிட்டாரு.

காசு குடுத்து ஏறிய என் நண்பர்கள் சிலருக்கு ஒரு வகையான எறிச்சல். இது யாருக்கும் ஏற்படுவது தான்.
நானும் சும்மா இல்லாமல் முதல் சுற்று ஆரம்பித்தவுடன் சிறு சத்தம் கொடுத்தேன் அவர்களுக்கு கேட்கும் அளவு.

அது மாலை நேரம்...அன்னைக்கு தான் நான் வாழ்க்கையில முதல் முறையா ராட்டினம் போறேன்.
கடைசியாவும் போனேன்.

முதல் சுத்து முடிஞ்சவுடனே ரெண்டாவது சுத்துல வேகம் கூடுச்சு.

ரெண்டு சைடு உள்ள கம்பிய புடிச்சிகிட்டேன்.
ரெண்டு முடிஞ்சு மூணாவது சுத்துல

கம்பிகள நான் இருக பற்றிகொள்ள ஆரம்பித்தேன்.

அடுத்த சுற்றுகளில்..
நான் கொஞ்சமா கொஞ்சமா நிலை குலைய ஆரம்பிச்சேன்.

கண்கள் ரெண்டும் இருட்டிக்கிட்டு வந்தது.
என் பக்கத்தில ஒரு பொண்ணு உட்கார்ந்திருந்தது. "ஆனா அதுக்கு ஒண்ணுமே ஆகலயே ? "ன்னு அப்ப ஆச்சரியப்பட்டேன்.

அந்த பொண்ணு என்னோட எப்படியும்  4 வயது கூட இருக்கும்.

நான் ஒரு மாதிரி நிலைகுலையிறேன், நான் ஒண்ணுமே கேட்காமலே என் தலைய அவங்க மடியில சாச்சுகிட்டாங்க, என் பக்கத்தில அமர்ந்தவங்க,அந்த அக்கா.

நான் அப்படி கண்ண மூடிட்டேன்.
ராட்டினம் எத்தன தடவ சுத்துச்சு, எவ்வளவு வேகமா சுத்துச்சு எதுவுமே எனக்கு தெரியாது.. ராட்டினம் நின்னவுடனே என்ன எழுப்பிவிட்டு பத்திரமா இறக்கிவிட்டாங்க...

என் முகத்த பார்த்தவுடனே நான் சரியாக ( I am no normal ) இல்லை அப்படிங்கறது அவங்க எப்படி உணர்ந்தாங்க ?
இல்லாட்டி நான் அங்க இருந்து கீழ விழுந்திருப்பேன்.

 அந்த சகோதரி எங்க இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்கள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும்...

சகோதரி என்ற சிலருக்கு சிரிப்பை தருமின் நான் அன்று யோசிக்கவில்லை, கவனிக்கவில்லை தப்பிக்க மட்டும் செய்தேன். அதற்கு ஒரு வகையில் என்னைவிட புத்திசாலித்தனமாக முடிவெடுத்த அவர் தான் காரணம்.

இந்த சம்பவத்திலிருந்து நான் எந்த ராட்டினத்திற்கும் சரி, தீம் பார்க்கும் சரி போரதப்பத்தி யோசிக்கிறதே இல்லை.
 சாதாராணமா ராட்டினத்த பார்த்தா கூட தலைசுற்றுவது மாதிரி ஒரு மனக்கற்பனை

சில பேர் இத Megalophobia -  பெரிய பொருட்களினால் வரும் பயம் என்றனர். எனக்கு அதன் உருவம்
பார்த்து என்றுமே பயம் வந்ததில்லை. அதன் சுழற்சிதான் சிறிது டரியலாக்குகிறது.

எனக்கு தெரியவில்லை ராட்டினத்தில் சுழலும் போது ஏற்படும் பயமா ? இல்லை
என் அருகில் ஒரு கரமோ, மடியோ கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயமா ?
அதனாலோ என்னமோ நான் இன்று வரை ராட்டினம் ஏறியதில்லை.


அந்த காசு வாங்காத ராட்டின தாத்தா, பக்கத்தில் அமர்ந்த அக்கா இருவரையும் நினைத்து பார்க்கிறேன்.

Monday, April 12, 2010

கரைமேல் பிறந்தார்கள்

நான் என்னுடைய இளங்கலை இரண்டாமாண்டு ஒரு பாடம் Ecobiology ஆய்வுக்கு Field Experiment -க்காக
இராமநாதபுரத்திற்கு கல்லூரி நண்பர்களோடு சென்றேன்.

என்னடா திடீர்ன்னு இராமநாதபுரம் பற்றி ...?


என் அண்ணனோட நண்பர் ஓமன் சென்று வந்தது பற்றி பேசும்போது அங்கிருக்கும் மீனவர் பற்றி சொன்னார்.அங்கிருக்கும் மீனவர் சிலர் ஒரு பெரிய மீன் பிடித்தால் போதும் அதுவே பெரிய விலைக்கு போகும் என்று சொன்னார். இதை நான் எங்கோ கேட்ட ஞாபகம்....

இராமநாதபுரம்...

நாங்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் காலை 6.40 மணிக்கு மாட்டுத்தாவணியில் பேருந்தில் ஏறினோம். பேருந்து சிறிது நேரம் கழித்து கிளம்பியது.
மதியம் 2 மணி அளவில் ராமநாதபுரம் நெருங்கினோம்.
எங்களது வேலை 24 மணி நேரம் தொடர்ந்து சோதனை செய்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கடலில்,காற்றில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவென்றும் அது எப்படி மாறுபடுகிறது என்றும் கணக்கிட வேண்டும். இன்னும் பல parameters எடுத்துக்கொள்ள முடிவு செய்தோம், செஞ்சோம்.

ஆனால் இதெல்லாம் செய்ய நாங்க தேர்ந்தெடுத்த Spot  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் என்ற இடத்தை தான்.
இன்னும் சரியாகச் சொன்னால் அங்கிருந்து சில தூரம் தள்ளி இருக்கும், அதாவது அந்த பாம்பன் பாலம் இங்கிருந்து தொடங்கும் இடத்தில் தான் எங்களது "Spot".
 அந்த இடத்தோட பெயர் தோணித்துறை.
அங்கே ஒரு சிறிய தேவாலயம் இருக்கும் அங்கே தான் தங்கினோம். இந்த இடத்தில் எந்தவொரு கடைகளும் இருக்காது. எது வேண்டும் என்றாலும் மண்டபம் 'ஊரு'க்குள் தான் போக வேண்டும்

இத்திசையில் இது இந்தியாவின் நிலப்பரப்பு முடியும் இடம். இது தாண்டி இராமேஸ்வரம் ஒரு தீவு போல் இருக்கும்.
அதனை நமது நிலப்பரப்போடு இணைக்கும் பாலம் தான் அன்னை இந்திரா காந்தி பாலம் அதாவது பாம்பன் பாலம்.இந்திய அரசியல் ஆதிக்கம் பல தீவுகளுக்கு இருக்கிறது. நாங்கள் இராமேஸ்வரம் செல்லவில்லை.

 எங்களுடன் வந்த சமைக்க தெரிந்த இரண்டு ஆசிரியர் அல்லாத கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள் ( அவர்களை 'அண்ணே'ன்னு தான் கூப்பிடுவோம்) வந்தார்கள்.
மண்டபத்தில் வண்டியில் இருந்து மாணவர்கள் நாங்கள் மூன்று பேரும், அந்த அண்ணன்கள்ல ஒருத்தர் மட்டும் இறங்கினோம்.
அந்த மூன்று பேரில் ஒருத்தன் நான், மற்ற இருவர் என்னுடன் படித்த முத்துகுமார், லோகநாதன்.விடுதியில் வேலைபார்த்த அந்த அண்ணன், நாங்கள் மட்டும் மண்டபத்திலே இறங்கியதன் காரணம் எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு, தேநீர், முதலியவற்றை தயார் செய்து நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லதான்.
 எங்களிடம் சொன்ன இல்ல இல்ல இட்ட கட்டளை என்னன்னா கண்டிப்பா இரவுக்கு அனைவருக்கும் மீன் இருக்க வேண்டும் என்பது.அது ஆசிரியரின் அன்புகட்டளை.
பேருந்தை விட்டு இறங்கியவுடன் அந்த ஊரின் உப்புக்காற்று என் மூக்கை மட்டுமல்ல உடலையும் சேர்த்து குலுக்கியது. என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை மூச்சுவிடும்போதெல்லாம் அந்த உப்பின் 'மணம்' மனதை உளுக்கியது.
நான் அங்கே இருக்க போவது ஒரு இரண்டு நாள் இங்கேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்தவங்க ? நினைச்சு பார்க்க முடியல...
இப்படி யோசிக்க கூட நேரமில்லை எனக்கு அப்ப....
மாலைக்குள் அத்தனை பொருட்களையும் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
எங்களது தேவைகள் என்னவாக இருந்ததுனா சமைக்க மீன்,விறகு,பாத்திரம்,பால்,கொண்டு செல்ல வாகனம்.
முதலில் வாடகைக்கு ஒரு டிரைசைக்கிளை அமர்த்தினோம்.
டிரைசைக்கிள்கார அண்ணே தெரிஞ்ச கடைகளுக்கு கூட்டிட்டு போனார். விறகு வாங்கினோம்.
 விறகு கடை வச்சிருந்தவர் இலங்கை அகதி,தன் சொந்த நாட்டில் மறுக்கப்பட்டவர்கள் என்று பேசி தெரிஞ்சுகொண்டேன்.
வெயில் தலையை சுளிர் என்று விழ எங்களுக்கோ ஜீவினில்லை.
அந்த இடத்தில பல கடைகள் இருந்தது. ஆனால் எனக்கு தெரிந்தது ஒருத்தர் கூட சிரித்து நான் பார்க்கவில்லை.

பாத்திரக்கடை சென்று வாடகைக்கு பாத்திரம் கேட்டோம். யாரும் தர முன் வரவில்லை. எவ்வளவு பணம் கேட்கிறார்களோ அந்த பணத்தை தருவதாக சொல்லியும் யாரும் தரவில்லை.
காரணம் என்று பாத்திரக்கடைகாரரிடம் கேட்ட போதுதான் சில பேர் வந்து இது போல் வந்து வாடகை பாத்திரம் வாங்கிட்டு கள்ளத்தோணியில் வேறு தேசம் சென்றுவிடுவதாக சொன்னார்.
நாங்கள் எங்களது ID CARD காண்பிச்சு பேசி எப்பிடியோ பாத்திரம் வாங்கிட்டோம்.மற்ற பொருட்களை எல்லாத்தையும் வாங்கினோம்.
இதுக்கே அந்த வெயிலுக்கு அந்த உப்புக்காத்துக்கு என் உடல் ஆற்றல் வெகுவாக குறைஞ்சிடுச்சு. நாக்கு வரண்டுறுச்சு.

இதுல டிரைசைக்கிளை வேற தள்ளிட்டு போனோம் மூணு பேரும்.
கொஞ்ச தூரந்தான். போன உடனே கடல போய் விழுந்தவன் தான் 3-4 மணி நேரம் கடலிலே கிடந்தேன்.

இரவு 7.30 மணி நானும் நண்பர்களும் பாம்பன் பாலத்தின் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அப்போ பாலத்தில் ஒரு சின்ன பையன் ஒரு கயிற கீழ தொங்க விட்டுட்டு அங்கிட்டு இங்கிட்டு நடந்துகிட்டே இருந்தான். என்ன ? எதுக்கு ? கேள்விகள் பல எனக்கு. கேட்டு பார்த்ததுக்கு என்னனா அந்த தூண்டில் போட்டிருக்கானா அந்த ஒரு சில பெரிய வகை மீன் தான் மாட்டுமாம். 
இந்த மீன் ஒன்னே சுமார் 500 ரூபாய்க்கு விற்கலாம் என்றும் கூடை கூடையாக விற்று லாபம் பார்ப்பதை காட்டிலும் இந்த ஒரு சில மீன்கள் தந்துவிடும் என்றும்.
Smart Work அவன் பண்றத நினைக்கும் போது அவன் சொல்ல கூடாது அவரை புருவத்தை தூக்கிப் பார்க்க வைக்கிறது.
ஆனால் அவர் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இரவும் அந்த ஒரு சில  மீன்களோடு முடிந்துவிடுமோ என்பதில் தான் என் பயமே.

அடுத்த நாள் கடலில் விளையாடிக்கொண்டிருந்தேன் எல்லாரும். சில படகுகள் கரையில் ஒதுங்கியிருந்தது.
படகில் இருந்து டைவ் பண்ணி கடலில் இருந்து குதித்து குளித்துக்கொண்டு இருந்தேன்.
பெரியவர் ஒருவர் வந்து எங்களை " எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் குளிங்க ஆனால் போட்ல மட்டும் ஏறாதிங்க. ஹெலிகாப்டர்ல ரௌண்ட்ஸ் வர்ற கார்ட்ஸ் கள்ளத்தோணி ஏற்றதா நினைச்சு விசாரிக்க ஆரம்பிச்சுருவாங்க ".
அப்படின்னு சொன்னார்.
இந்த அரசாங்கம் என்ற இந்த System என்னால புரிஞ்சுக்கவே முடியல. நாட்ட ஆகாய மார்க்கமாக கண்கானிக்கற இந்த அரசாங்கம் கரைகளில் வாழும் இவர்களை சொந்த நாட்டிலே வாய்ப்புகளும், வாழ்வும் வருவதற்கு ஏன் எந்த கண்காணிப்பு நடத்த மாட்டேங்கிறது.
ஊரிலிருந்து இவர்கள் தள்ளி கரையோரைங்களில் வாழ்வதனால வாய்ப்புகளும் திட்டங்களும் இவர்களுக்கு தெரிவதில்லையோ.
இலங்கை தமிழர்களை அகதிகள் என்று பெயர் வைக்கிறோம். ஆனால் கறையோரங்களில் வாழும் இவர்கள் சொந்த நாட்டிலே அகதிகளாக நடத்தப் படுவது என்ன ......................................................................
...............................................................................................................................................................................................
................................................................................................................................................................................................

இங்கே இடம் விட்டதற்கு காரணம் இவர்களை இப்படி ஆக்கியவர்களை கண்டுகொள்ளவோ, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வோ உங்கள் எண்ணங்களால் நிரப்பிக் கொள்ளத்தான்.

இவங்களுக்கு ஏதாவது செய்யணுங்க கண்டிப்பா.
இந்த இடங்களில் மட்டும் வாழ்வதற்கு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்க்கையை வாழ இயன்ற முயற்சி செய்கிறார்கள். முயற்சியில் இவர்களுக்கு உப்புகாற்றும் தெரிவதில்லை, வெயிலும் தெரிவதில்லை.

அன்று இரவு முழுக்க நான் தூங்காமல் கடலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.


Monday, March 29, 2010

இந்த பஸ் எந்த ஊருக்கு போகும் ?

பஸ் டிரைவர்...அரசு விரைவுப் பேருந்து, மாநகரப் பேருந்து, சுற்றுலா பேருந்து, கல்லூரி பேருந்து அப்படின்னு சொல்லிட்டே போகலாம்.
ஓவ்வொருத்தருக்கும் இந்த பஸ் டிரைவர் பத்தி மனசுக்குள் ஒரு உருவகம் இருக்கும். நாம் நம் வாழ்வில் சந்தித்த ஏதோ ஒரு டிரைவர் நம் மனதிற்கு வருவார்.

பொதுவாக டிரைவர்கள் என்றால் கருத்த உதடுகள் ( புகைப்புடிப்பதினால் உதடுகளுக்கு கிடைத்த நிறம் ), ஒரு புகையிலை வாசனை, மயிற் மெதுவாக கொட்ட ஆரம்பித்து வழுக்கை விழும், அடிக்கடி டீ சாப்பிட சொல்ல நினைக்கும் மனது என்று பெரும்பாலும் இப்படி தான் இவர்கள் மனதில் வலம் வருவார்கள்,இவர்கள் விதிவிளக்கு இருக்கவே செய்கிறார்கள்.

நானும் ஒருவருடனும் பழக்கமானேன். அவர் ஒரு கல்லூரி பேருந்தின் டிரைவர்.
அந்த அண்ணன என்னுடன் வேலை செய்த எல்லோருடனும் நன்றாக பழகுவார். நாங்கள் கணிப்பொறி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். அவர் அங்கு கணிப்பொறி கற்றுக்கொள்ள வந்தார்.

கற்றுக் கொள்ள வந்தவர் எங்களிடம் வகுப்பு நேரம்போக எங்களிடம் பல கதைகள் சொல்வார்.
கதைகள் எல்லாம் யாரோ ஒருவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்வார் ஆனால் யாருடைய பெயரையும் சொல்ல மாட்டார். கதைகள் கொஞ்ச "கில்மா" கதைகளாக இருக்கும்.

டிரைவர் வாழ்க்கையில் இருக்கும் அந்த சங்கடங்கள், சுவாரஸ்யங்கள் என அனைத்தும் சொல்வார்.

அவர் ஏதோ ஒரு கல்லூரிப் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த கல்லூரிக்கு பல பேருந்துகள் உண்டு.
ஊருக்கு வெளியே இருந்த அந்த கல்லூரிக்கு போகும் போது , ஒவ்வொரு பேருந்துக்கும் இடையில் ஒரு போட்டி நிலவும். ஆனால் இந்த போட்டி illegal racing
எப்போது ஆரம்பிக்கும் என்றால் City Limit தாண்டிய பின் தான். இங்க வயது வித்தியாசம் என்ற பேதம் கிடையாது.
போட்டிகளில் வயதான இளைஞர்கள் கூட முதலில் இலக்கை அடைந்து விட்டுவிட்டு " சு*!@$#%  ... யார்க்கிட்ட ,,,, போடா உன் வயசு என் அனுபவம்டா  ", அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் போவார்களாம்.

வழிவிட்டு அமைதியாக செல்பவர்களும் உண்டு.

இப்படி நாம் இவர்களை யோசிக்கும் போது அழகாக தெரியும் இவர்களையே

இந்த பஸ்ஸை தவிர வேறு வாகனங்களில் நம்மில் பலர் பயணம் செய்தால் அந்த வாகன ஓட்டுனரின் பார்வையில் இந்த பஸ் டிரைவர் கண் முன் தெரியாமல் ஓட்டுபவர் போல தெரிகிறார் பெரும்பாலான சமயங்களில்.
அந்த வாகன ஓட்டுனர் பஸ் டிரைவரை எப்படியாவது ஓரிரு வார்த்தைகள் திட்டுவார்.

இந்த வாகன ஓட்டுனர் மட்டுமல்ல , சாலையோரங்களில் நடந்து செல்லும் எந்தவொரு சாமனிய மனிதனும் இந்த பஸ் டிரைவர்களை பழிக்கத்தான் செய்கிறார்கள்.

சரி ... இப்ப இந்த டிரைவர்கள் இவர்கள் நம்மில் பலர் நினைப்பது போல் அகங்காரத்துடன் பேருந்து ஓட்டுகிறார்களா ?

இவர்கள் இயக்கும் இந்த வண்டியின் அளவு இவர்களுக்கு இந்த பிம்பத்தை தருகிறதா என்றால் ? ம்ம்ம்ம் இருக்கலாம்....

அந்த டிரைவர் அண்ணே என்கிட்ட சொல்லும் போது அவர்களில் சிலர் வண்டியினை வேகமாக செலுத்துவே செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் வெறிபிடித்து ஓட்டுவதில்லை என்று சொன்னார். They are not Maniac.
ஆனால் அவருக்குள் ஒரு கனவு, ஒரு ஆசை என்னவென்றால் அவருக்கு இந்த பஸ்ஸை ஓட்டும் பணியிலிருந்து வேறு நல்ல மேஜை பணிக்கு செல்ல விரும்பினார். அவர் அத்தனை வருடம் பேருந்து ஓட்டிய காலம் சிறு விபத்துகளை சந்தித்திருக்கிறார்.
தன்மேல் தவறில்லை என்றாலும் சிலரை இரண்டு மணிக்கு ஒருவரை ஒரு மருத்துவமனையில் செர்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சில நேரம்  அந்த மனிதனின் வலி, இரத்தம், அந்த பாவம் தன்னையோ தன் குடும்பத்தையோ பாதிக்குமோ என்ற பயத்தில் தான் அந்த வேலையை விட்டு செல்ல நினைக்கிறேன் என்பார்.
ஒரு மனிதனின் மனமே அவனுக்கு எதிராக செயல்படுமாயின் அது உளவியல் ரீதியாக சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றே.
அவர் தன் வாழ்வில் நடக்கும் எந்த அசம்பாவித தற்செயலாயினும் அது என்றோ தான் ஏதாவது உயிரில் வலி ஏற்படுத்தியதன் காரணமாக இருக்குமோ என்று அவர்களது மனம் கேள்வி கேட்டு சித்தரவதை செய்யும்..

இந்த மனச்சூழல் சாதாரணமாக யாருக்கும் வரக்கூடியதே. ஆனால் இவர்கள் உயிர்களோடு சம்பந்தப்படுவதால் விளைவுகளும் உயிர்களோடு சம்பந்தப்படுமோ என்ற பயம் தொனிக்கும்.

இங்கே எத்தனை பேர் The Machinist என்ற திரைப்படத்தை பார்த்திரிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.Brad Anderson நெறியாள Christian Bale நடிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படம் இடித்துவிட்டு ஒடும் டிரைவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார்கள்.

சேரி இதுல நாம என்ன பண்ண முடியும் ? அப்படின்னா...நாம ஒவ்வொருத்தருகிட்டையும் போயும் உங்களுக்கு அந்த பிரச்சனையா ?  இல்ல இந்த பிரச்சனையா ? கேட்க வேண்டாம்.

கெட்டத நல்லதால அறுப்போம்.
இந்த டிரைவர்கிட்ட பயணம் முடிஞ்சு "தேங்க்ஸ்.. நல்லா ஓட்டினிங்க " அப்படின்னு ஒரு பிரயாணி சொன்னார். பெருமையா இருந்தது.
இது என்னோட தீர்வு இல்ல அந்த பிரையாணியோடது. 

சார் இந்த பஸ் எந்த ஊர்க்கு போகும் கேக்குற நாம பயணம் முடிஞ்சு ஏன் ஒரு நன்றி சொல்ல கூடாதுன்னு தோணுச்சு

இந்த இடுகைய படிக்கிற எந்த ஒரு பேருந்து ஓட்டுனருக்கும் உங்களுக்கு மற்றவர் உங்களை தூற்றுகிறார் என்ற எண்ணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் உங்களுக்கு என்னுடைய சாரி அப்புறம் நன்றி.



Friday, March 26, 2010

காதல் காதல்

நான் இப்படி ஒன்றை எழுதுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை. நான் சின்ன பையங்க எனக்கு ஒன்னு தெரியாது


எனக்கு இதில் எப்பொழுதும் ஆர்வம் அவ்வளவாக இருந்ததில்லை. என் பள்ளி நாட்களிலிலும் சரி, இப்போது முடிந்த என் இளங்கலை கல்வி கல்லூரி நாட்களிலிலும் சரி நான் எந்த பெண் அவ்வளவாக மயங்கியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் சிலரிடம் CRUSH இருந்திருக்கிறது...
அதனை இதோடு நான் குழப்பிக்கொள்ளவில்லை ...
குழம்பியிருந்தால் நான் காதல் வயப்பட்டுருப்பேனோ என்னவோ..?
நான் பலரிடம் நன்றாக பழகுவேன்.

அந்த பெண்களும் அப்படித்தான். அவர்களும் குழம்பவில்லை.

ஆனால் எனக்கு ஈடுபாடு இல்லை...ஏன் என்றால் தெரியவில்லை...
யார் கண்டார் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?

இவ்வாறு போக...
என் நண்பர்கள் பலர் ஏன் எல்லாரும் என்று கூட சொல்லலாம் யாரையோ காதலித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களை நன்றாக கேளி செய்வேன். இந்த காதல் செய்றவர்களை கேளி செய்வதே தனி சுகம்.
இவர்களில் பெரும்பாலானோர் ஒரு தலை ராகங்கள் தான்.
 3 மாதம், 10 மாதம், 2 வருடம், 3 வருடம் ஏன் 7 வருடம் கூட ஒரு தலை ராகம் பாடியவர் உண்டு.அவர்கள் தனியாக சிக்கினாலும் சரி, கூட்டமாக சிக்கினாலும் சரி ஓட்டி எடுத்துவிடுவோம்.

இன்னொரு கூட்டம் என்ன வகை என்றாலும் காதலை சொல்லிவிடுவார்கள்.
ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பாள். இவர்கள் கண்களில் கண்ணீர்.
சில சமயம் அந்த பெண்ணை தூற்றும் ஆண்களை பார்த்திருக்கிறேன், அவள் நன்றாக வாழ எண்ணியவரை பார்த்திருக்கிறேன்,பெருமைப்பட்டு, ஆச்சரியப்பட்டும் இருக்கிறேன். "இன்னும் உங்கள மாதிரி ஆள் இருக்காங்களான்னு"

மாமா பொண்ணு, அத்தை பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு காதல். எப்பா! இவனுங்க காதல்ல எங்கெங்கிருந்தோ வில்லன் வர்றான் அப்படிம்பாங்க.
 அசல்ல ஒரு மாப்ளன்னோன இங்க இவருக்கு புளிய கரைக்கும். வேற வழியில ஒரு சொந்தக்காரன் மாப்ளன்னு வந்து நின்னுருவான்னு பயம் . கதைல டூவிஸ்ட் இருந்திகிட்டே இருக்கும்.

அடுத்த கூட்டம் இரு பாலரும் மாங்கு மாங்குன்னு என்று காதலிப்பார்கள். திடீர் என்று ஒரு பிரேக் அப். காரணமே இருக்காது. அப்புறம் புலம்பல். அன்பு ஏங்குறது.

அப்புறம் உள்ளவங்க, ஹார்மோன் கடலன பொங்க, அந்த தீ அணைக்க காதல் என்னும் பெயர் வைத்துக் கொள்ளும் புத்திசாலிகள். என்னை கேட்டால் இவர்கள் களவும் பாலருடனே வாழ்ந்து வந்தாலே போதும் திருமணம் என்று தேவையே இல்லை. நான் பல சமயம் இவர்கள் செய்வதுதான் உண்மையான
ககாடததலலலோ என்று "வியந்திருகிறேன்"
ஆதி மனிதன் இனவிருத்திக்காகத்தானே துணை தேடினான்.
 அப்ப எதுக்காக ஒருத்தி கூட மட்டும் வார்த்தை சேர்த்தன்னு கேட்டிங்கன்னா , பாலியல் நோய் பரவாது, குழந்தை மனவளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் தாயிம் தந்தையிம் சேர்ந்திருந்தால்.

இப்படி நிறைய வகையா சொல்லலாம் காதல்ல.
ஆனால் நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது எங்கள் கல்லூரி போரட்டத்த சந்திச்சப்ப நாங்க மரத்தடியில வகுப்பு முடிந்து இன்டெர்வல் அப்ப சுதந்திரமாக யோசிக்கும் போது, என் நண்பர்கள் கிட்ட சொன்னேன் " லவ் பண்ணி மேரஜ் பண்ணா ஜாதி கொடுமை, ஏற்றத் தாழ்வு, ஜாதிகளுக்கான so-called-identity காணாமல் போக வாய்ப்பிருக்கில்ல ?" அப்படின்னு கேட்டிக்கிட்டோம். அப்ப அதான் டாப்பிக்.

ஆமான்ற ஒரு முடிவுக்கு வந்தோம்.  நானே எதிர்பாக்கல எங்கிட்ட இருந்து அப்படி ஒரு முடிவ. லவ் பண்றவங்கள சந்தோஷமாக பார்க்க ஆரம்பித்தேன்...

சில நாட்கள் கழித்து என்னை சுற்றிய காதல் ஜோடிகள் அனைத்தும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அறிந்தேன்.
 அதன்பின் தான் அறிந்தேன் ஓரே வகுப்பை சேர்ந்த மக்களாய் இருப்பதால்தான் அவர்கள் காதலர்கள் என்று தங்களுக்குள்ளேயே அடையாளம் காணப்படுகிறார்கள் என்று.
" ஏன் ?" கேட்டால் ஓரே பதில் " Easily Attainable and Accessible  ".
 நாம் அடைந்து விடுவோம் என்ற ஒரே காரணத்தினால் காதலிக்கிறீர்கள் என்றால் ? இப்படி ஒரு காதல் தேவை தானா ?
 இப்படி காதலித்து ஜாதி காப்பாற்றி கொள்ளும் இன்னும் பழமை வாதியாக வாழும் காதலர்களின் காதல் தலைகுனியட்டும்.

ஆனால் என்னுடன் பயின்ற,வாழ்ந்த, வாழப்போகும் நண்பர்களுக்கு நீங்கள் காதலிக்கும் பெண் தற்செயலாக வகுப்பு இருந்து உங்களுக்கு எந்த எதிர்ப்பு வராத பட்சத்தில் உங்களுக்கு வாழ்த்துகள்.

ஜாதி , மததிற்காக, உங்கள் காதலை என்றும் விட்டு கொடுக்க வேண்டாம்.
Never Compromise Love for " Something that means only in paper"

Wednesday, March 24, 2010

மனச்சூழல் மாசுபாடு

 நான் எனது இளங்கலை இறுதியாண்டு படித்து கொண்டிருந்தேன். நான் உயிரியல் மாணவன் என்பதால்
எனக்கு உயிரியல் தொடர்பான எந்த பிராஜக்ட் கிடைத்தாலும் அதை செய்ய முனைப்பாக இருந்த காலம்
அது.

அந்த சமயம் C.P.Ramasamy Ayyar Educational trust என்னும் Non-Profit Non-Governmental  Organization ஒரு அமைப்பு
சுற்றுசூழல் மாசுபாடு குறித்து ஆய்வறிக்கை செய்ய எங்கள் கல்லூரியில் பயிலும் உள்ள இதில் ஆர்வம் உள்ளவர்களை தொடர்பு
கொள்ள சொன்னார்கள்.
 நானும் என் வகுப்பு மாணவர்களும் நாங்கள் விலங்கியலுடன் கூடிய உயிர் தொழிநுட்பவியல் மாணவர்கள் , உயிர்வேதியல் மாணவர்களும் சிலரும் அந்த சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஆய்வை செய்வதில் உதவ தலைபட்டோம்.

எங்களது வேலை நமது வளி மண்டலத்தில் எவ்வளவு தூசு , Sulphur-Di-Oxide ( So2 ) , Nitrogen-Di-Oxide (No2) இருக்கிறது என்பதை கண்டறிய High Volume Sampler  என்ற கருவியை பயன்படுத்தினோம்.
இது போக ஒரு நாளில் எத்தனை இரு சக்கர, நாலு சக்கர வாகனங்கள் செல்கின்றன என்றும் கணக்கு எடுத்து கொண்டு இருந்தோம்.

இந்த ஆய்வு மதுரையில் மூன்று இடங்களில் செய்தோம். இது பெரும்பாலும் ஜனநடமாட்டம், வாகனங்கள் அதிகமாக செல்லும் இடங்களில் செய்யலாம் என்று தேர்ந்தெடுத்தோம்.
முத்லில் பெரியார் நிலையம் எதிரே உள்ள தீயணைப்பு நிலையம் அருகே அமர்ந்து முதல் நாள் வேலை நடத்தினோம்.

இரண்டாம் நாள் யானைக்கல். சிம்மக்கல்லில் உள்ள இடம் அங்கே காய்கறிகள், பழங்கள் விற்பார்கள்.

மூன்றாம் நாள் கோரிப்பாளையம்.
அந்த High Volume Sampler என்ற கருவியை இயக்க மின்சாரம் தேவைப்பட்டது . முதல் இரண்டு நாட்களும் எந்த பிரச்சனையும் இன்றி எங்களுக்கு மின்சாரம் கிடைத்தது.

மூன்றாம் நாள் கோரிப்பாளையத்தில் ஆய்வு செய்ய எங்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள கடைகளில் ஏதாவது ஒரு கடையில் மின்சாரம் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கேட்க இரண்டாம் வேலை முடிந்தவுடன் சென்றோம்.

ஆனால் ஒரு கடையில் கூட எங்களுக்கு மின்சாரம் கிடைத்தபாடில்லை.இத்தனைக்கும் அந்த மின்சாரத்திற்கு ஆகும் பணத்தை தருவதாக அமைப்பை சார்ந்தவர் தருவதாக சொன்னார்.

நீங்கள் கேட்கலாம் சட்டபடி மின்சாரத்தை வெளியே விற்பது தவறில்லையா என்று ? இது ஒரு அரசு சார்ந்த, அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்பதால் இதில் எந்த சிக்கலும் இல்லை என்று எங்களுடன் வந்த அந்த அமைப்பு சார்ந்தவர் சொன்னார்.

நாங்கள் இந்த விவரங்களை விளக்கி சொல்லியும் யாரும் எங்களுக்கு செவி சாய்க்கவில்லை.  
நான் என் நண்பர்களும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம். பலனில்லை.

பின் நாங்கள் ஒரு சிறிய கடை சொல்ல போனால் அந்த வரிசையிலே அது தான் சின்ன கடை எனலாம். அதில் அம்மா இருந்தார்கள்.
எல்லா விவரங்களையும் விளக்கி சொன்னேன். எதுவரையில் என்றாலும் இந்த ஆய்வறிக்கையால் நமக்கு ஏதோ வகையில் நல்லது நடக்கும் என்று. வேறு சட்டப்படி இது தவறில்லை, இது அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்றெல்லாம் நான் சொல்லவே இல்லை.

நாங்கள் மற்றவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்ய சொல்லவில்லையே. எல்லாம் தெளிவாக விலக்கிய பின்னும் இந்த நிலைப்பாடு வருத்ததிற்குரியது.
 "எதுக்குப்பா வம்பு " என்ற போக்கு நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுமோ என்ற அச்சம் தொனிக்கிறது.
 நாம் தனித்தீவுகளாக வாழ ஆரம்பித்துவிட்டோம்.

 நாம் நம்மை போல் பிறரையும், பிறரின் நலனையும் சற்று சிந்திக்க வேண்டும்.
Sustainable Development என்று சொல்வார்களே அதற்கேற்றார்போல் வாழ வேண்டும்
மனிதர் மனச்சூழல் மாசுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது இல்லை இல்லை மாசுபட்டுவிட்டது.
இந்த மனிதர் மனச்சூழல் மாசுபாட்டை சரி செய்தால் சுற்றுசூழல் மாசுபாடு என்ன சமூகத்தில் நிலவும் பிரச்சனையும் தீர்த்துவிடலாம்.
இந்த இடுகையில் எந்த சந்தேகமின்றி எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அந்த மூன்று நாட்களிலும் எங்களுக்கு மின்சாரம் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

Monday, March 22, 2010

மறக்க முடியாத 21

மனிதன் யோசிக்க தெரிந்த, சிரிக்க தெரிந்த மிருகம் என்று பலர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.
இந்த வாக்கியம் எவ்வளவு உண்மைமிக்கது ?
ஆனால் மனிதரில் சிலர் தங்களது தனித்தன்மை அறியாது அஃதாவது தான் யார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

இவர்களை பெரும்பாலும் நம்மில் பலர் ஓரே வார்த்தையில் இவர்களை "பைத்தியம்" என்ற வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள் இவர்களது பிரச்சனை என்னவென்று தெரியாமல்.

22 மார்ச் 2010 அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பலர் பார்த்திருக்ககூடும்.அந்த நிகழ்ச்சி Down's Syndrome என்ற குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய நிகழ்ச்சி.

Down's Syndrome இருக்கும் நபர்களிடம் மனிதனின் மரபணுவில் 23 குரோமோசோம் ஜோடிகளில் 21 ஆம் ஜோடியில் மட்டும் ஜோடி குரோமோசோம் பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கும் (Trisomy என்பார்கள் ).
 மார்ச் 21 உலக டௌன் சிண்ட்றோம் நாள் ஆகும்.
பெயர் காரணம் பிரிட்டிஷ் மருத்துவர் John Langdon Haydon Down என்பதில் இருந்து வந்தது

ஒவ்வொரு 800 குழந்தைகளுக்கும் ஒரு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பது புள்ளிவிவரம்.
ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் இருக்கும் போதே அதுவும் 11 முதல் 13 வாரங்களுக்குள் நாம் பரிசோதித்து பார்க்கலாம் பிறக்க போகும் அந்த குழந்தை Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டதா என்று கூறுகிறார்கள்.
எதற்கு ?
இந்த உயிரை கருவிலே அழிக்கவா ?

இவர்களை மருத்துவம் செய்வதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று சாரார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் பண்புகள் என்றால்



எதையும் புரிந்துகொள்ளும் திறன் (Cognitive Ability) குறைவாக காணப்படும்

வாலிப பருவத்தில் உள்ளோர் தீவிர மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் பார்வையில் குறைபாடு இருக்கவே செய்கிறது.

வாய், காது, தலை,கழுத்து இவர்களுக்கு சிறிதாக இருக்கும்.

 நாக்கு வாயுடன் உள்ளே ஒட்டி இருக்கும்.

கண் பெரிதாக இருக்கும்.
மற்றவர்களை விட இவர்கள் வெகுவாக வித்தியாசப்படுவது இவர்களுக்கு இருக்கும் குறைந்த Reflex Action & Poor Muscle Tone.

இன்னும் இவர்களுக்கு பல மருத்துவ பக்கவிளைவுகள் இருக்கவே செய்கிறது.அதனை Treatment செய்துவிடலாம் என்கிறார்கள்.

இவர்களுகென்று மாத்ரூ மந்திர் என்று அமைப்பு சென்னையில் இருக்கிறது. இந்த அமைப்பு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டோருக்கு என்று சிறப்பு பயிற்சி நடத்தி வருகிறது.

கடந்த 10 வருடங்களில் 4000 குழந்தைகளை இவர்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்கிறார்,  இந்த அமைப்பின் தலைவர் Dr.லேகா ராமச்சந்திரன்.
இவர்கள் இசைக்கருவிகள் இசைக்கிறார்கள், நீச்சலடிக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள்.
பரத நாட்டியம் ஆடுகிறார்கள்.

இந்த குழ்ந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் அல்லாத மற்ற பள்ளிகள் இவர்கள் என்னதான் தகுதியுடைவர் என்று நிருபித்தாலும் இடம் கொடுக்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது.
இந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் மற்ற குழந்தைகளுக்கு (Feeling of Apathy) தன்னை போல் பிறரை நினைக்கும் பண்பு வ(ள)ரும், என்பது என் கருத்து.

Dr.லேகா ராமச்சந்திரன் இந்த குழந்தைகள் எதையும் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்களால் முடியாதது என்று எதுவும் இல்லை.
இவர்கள் போதிய பயிற்சி பெற்ற பின் கூட மற்ற பள்ளிகள் சேர்க்காதது, அந்த பள்ளிகளுக்கு தான் நஷ்டமே என்றார், காரணம் இந்த குழந்தைகளின் மூலம் மற்ற குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கை, அன்பு பெருகும் என்றார்.

நம்ம ஊர்ல தான் " +2 Results " போயிடும் மதிப்பெண் குறைவாக வாங்குகிற மாணவரை அந்த வருடம் அந்த மாணவரெல்லாம் பரீட்சை எழுத விடாம பள்ளிகள் தடுக்கிறது. ஓரே வகுப்புல ஒன்னா படிச்சவனுக்கே இந்த நிலைமைன்னா இந்த சிறார்க்கு யார் இடம் கொடுப்பா ?

இந்த பள்ளிகளிடம் இருந்து வரும் பதில் " They should go for Special school,This is a Competition world. 
This world has become a Race, they can't cope up with that ".

ஆனால் மாத்ரூ மந்திர்க்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்களை வாழ்த்த வயதில்லை.

இந்த டௌன் சின்றோம் குழந்தைகளை ஆக்கப் பூர்வமாக உருக்குவாக்குவோர் கையில் சேர்த்தால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்
ஏனென்றால்
சுற்றியிருக்கும் குதிரைகள் இடித்து தள்ளிவிட்டு ஓடி விடும்.
ஏன் கேட்டா " Life is a Race" ன்னு நம்ம கிட்டயே தத்துவம் பேசுவானுங்க.
வாழ்க்கை ரசிக்க தெரியாதவனுங்க.

இந்த பள்ளிகள் நாளைய உலகுக்கான மனிதர்களை வளர்கிறதா அல்ல ஓடி பிழைக்க குதிரைகளை தயார் செய்கிறதா ?

Wednesday, March 17, 2010

நான் படிக்காத பள்ளிகூடம்

நான் வெளியே ஊர் சுற்றிப் பார்க்கும் இயல்புடையவன் அல்ல. இருந்தும் அன்று நான் என் வேலை நிமித்தமாக ஊரின் புறநகருக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது ஊரின் புற நகரில் இருக்கும் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்தது.
 நானும் என்னுடன் வேலைப் பார்ப்பவரும் சென்றோம்.

 அது ஒரு கிராமத்து பள்ளிக்கூடம் என்றறிந்தேன்.

நான் அதுவரை நான் அப்படியொரு பெண்கள் பள்ளிக்கூடம் கண்டதில்லை, சொல்லப் போனால் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை பார்த்ததேயில்லை.

பள்ளிக்கு பின் ஒரு கால்வாய், ஒரு பாதுகாப்பு கிடையாது. பள்ளிக்கட்டடத்திற்கு நடுவே ஒரு பாலடைந்த, பாதி இடிந்த ஒரு கட்டிடம் இருந்தது. அந்த இடிந்த கட்டிடத்தில் உடைந்த கருங்கற்கள், செங்கல்கள், சறிந்து விழும் நிலையில் இருந்தது.

எந்த நிலையிலும் யார் தலையில் வேண்டுமானாலும் விழ நேரலாம்.
சுத்தம் என்று எங்குமே பார்க்க முடியவில்லை.

பள்ளியின் படிக்கட்டுகளில் ஒரு நாய் தூங்கிக்கொண்டிருந்தது. அந்த ஆண் நாய் சொறி பிடித்திருக்ககூடும் என்று தெரிந்தது பார்த்தவுடன்.

அந்த நாய் யாரையும் கடித்தால் Rabbies நோய் தாக்க கூட வாய்ப்பிருக்கிறது. யாரும் அந்த நாயை விரட்ட மாட்டார்களா என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

பள்ளிக்குள்ளே தின்பண்டங்களுக்கான ஒரு அங்காடி இருந்தது.பொருட்கள் யாவும் சுத்தமின்றி ஈ மொய்த்துக் கொண்டு இருந்தது.

அப்புறம் ஆசிரியைய பார்க்க போனேன். அவங்க மதிய உணவு உண்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டு கொண்டுருந்தார். அங்கிருந்த எல்லா ஆசிரியயையும் சொல்ல மாட்டேன், ரொம்ப சிலரை தவிர பலர்
மெனக்கெடுவடதும்,அற்பணிப்பும் இல்லை. சிலரில் ஒருவர் மென்பொருள் தொடர்பாக என்னிடம் சந்தேகம் கேட்டார்.

அந்த பள்ளியில் இணையதள வசதி இருந்ததால் ஒரு சின்ன open source
மென்பொருளை தறவிறக்கி நிறுவினேன்.

 

அந்த ஆசிரியையின் அந்த updation சிறிது மகிழ்ச்சி தந்தது. வரும்போது நான் வசிக்கும் இடத்தில் வசிக்கும் ஒருவரை பார்த்தேன். அவரது மகனை ஒரு பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.
" ஏன் தான் பணி செய்யும் அரசு பள்ளி போல் ஆண்கள் பயில்வதற்கான் அரசு பள்ளியில் ஏன் படிக்கவைக்கவில்லை ? " பதில் யோசித்தேன் எனது இந்த இடுகையை மீண்டும் படித்தேன்....
பதில் கிடைத்தது...
கேள்வியிலே பதிலும் ...பதிலிலேயே கேள்வியும் இருப்பது
 ஒன்றும் விந்தையில்லையே

என்னையும் இம்மாதிரி பள்ளிகளில் என் தந்தை சேர்க்காததன் காரணம் புரிந்தது இந்த பள்ளிகளில் உள்கட்டமைப்பும், எல்லா ஆசிரியர்களிடமும் மெனக்கெடுதல் சரிவர இருப்பதில்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் இந்த இந்த மெட்ரிக் பள்ளிகளில் மட்டும் மேலே சொன்ன எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் " இல்லை " என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் வருமான ரீதியாக பின் தங்கியவர்களாகவும், காப்பகத்தில் வள்ர்க்கப்படுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்த பள்ளிகளில் கூட படிக்க மறுத்துவிட்டால் இவர்களை இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.

+2 வகுப்பு முடிந்தவுடன் பெரும்பாலும் இந்த பெண்களுக்கு திருமணம் பெரும்பாலும் தன் உறவினனுடன் நடந்துவிடுகிறது.
வெகு சிலரே இந்த கிராமங்களில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக உயர்கல்வியோடு பறக்கிறார்கள். பலரது சிறகுகள் தங்களது வீடுகளுக்குள்ளேயே ஓடிக்கப்படுகிறது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பும், ஆசிரியரின் மெத்தனப்போக்கும் இல்லாமல், பள்ளிகளில் பெண்களுக்கு அடுத்து தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், படிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஆசிரியர் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இயல்பு நிலையில் வந்திருந்தால் என்னை போன்றோர் மெட்ரிக் பள்ளிகளில் படித்திருக்க மாட்டோம்.இனி வந்தால் எங்கள் தலைமுறை இந்த பள்ளிகளிலேயே படிக்கும்.

வருமா அந்த நாள் ?

Sunday, March 14, 2010

பெண்ணே மன்னித்து நிற்க... சச்சினுக்கு நன்றி...

இந்த இடுகை சச்சின் டெண்டுல்கர் தனது 200* ரன்கள் ஒரு நாள் போட்டியில் எடுத்த போதன்றே

வெளியிட விரும்பினேன். ஏனோ சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே போனது.

மார்ச் 8 அன்று வெளியிட தலைப்பட்ட போது அன்று பல வலைத்தளங்களில் மகளிர்கான பல

இடுகைகள். பத்தோடு பதினொன்றாக என் இடுகை இருக்க விருப்பமில்லை என்று சொல்லவில்லை.

அந்த இடுகைகளை படிக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது.இந்த இடுகை தள்ளிப் போனது.

மகளிர் தினம் முன்னிட்டு எத்தனையோ இடுகைகள் மகளிர் மசோதா பற்றி, பெண் கல்வி, பெண்ணுரிமை,

'எனக்கு பிடித்த 10 பெண்கள்' என்று எத்தனையோ இடுகைகள். ஒவ்வொன்றும் அவ்வள்வு கருத்தூன்றச்

செய்யக் கூடியவை.

இந்த இடுகைக்கும் சச்சினுக்கும் என்ன சம்பந்தம் என்றால் சச்சின் தொட்ட அந்த 200* என்ற அந்த

சாதனை செய்த அன்று ரவி சாஸ்திரி ஒரு comment கொடுத்தார். இந்த கிரஹத்தில் 200* ஒரு நாள்

போட்டியில் 200 ரன் தொட்ட ஒரே வீரர் இவர் தான் என்றார். எனக்கு பொறி தட்டியது. உடனே அவரது

பெயரை Wikipedia தட்டி Go என்ற Button-ஐ சொடுக்கினேன்.

சச்சினின் சாதனகள் இருந்தது. அதற்கு கீழே Belinda Clark என்ற பெண்ணை பற்றி ஒரே வரி இருந்தது.

சச்சின் இப்பொழுது தொடும் சாதனையை பெலிண்டா கிளார்க் என்ற பெண் 1997 ல் 229 ரன் எடுத்தார்.

பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய அவர் 229 ரன்களை 1997 ல் Denmark அணிக்கு

எதிராக மும்பையில் எடுத்தார்.

அந்த வருடம் பெண்கள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக் கோப்பை 1973 ஆம் ஆண்டிலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.

ரவி சாஸ்திரி சொன்னது ஒரு வகையில் தவறு. இந்த கிரஹத்தில் 200 ரன்கள்

முதலில் எடுத்தவர் இந்த பெண் என்று எண்ணும்

ஆச்சரியமும் பெருமையும் உண்டு எனக்குள்.

வருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால் இவரை பற்றி பலருக்கு

தெரியாமல் போனதுதான்.

இந்த பெண்களின் திறமையினையும் தீறத்தையும் நாம் இவரை பற்றி

தெரியாதவருக்கு சொல்வதற்கே இந்த வகையான இடுகைகள்.

ஆனால் சச்சின் 200* ரன் எடுக்காமல் இருந்திருந்தால் நான் இவரை பற்றி

தெரியாமலே போயிருப்பேன்.

ஒருவர் சாதனை செய்தால் இந்த உலகம் உற்றுப் பார்க்கும் என்பார்கள்.

ஆனால் பெண்கள் செய்யும் சாதனைகள் கூட இன்னொருவரின்

 சாதனையோடு ஓப்பிட்டு பாராட்டினால் அது எப்படி தகும் ?

" ஒரு ஆண் சாதனை செய்த பின் தான் பெண்களின் செயல்களோடு அதனை

ஓப்பிட்டபின் தான் பெரிதாக பேசுவீர்களா ? " என்று பெண்ணியம் கேட்டால்

நமது பதில் " மன்னிப்பு " மட்டும் தான் என்று சொல்லி தப்பிப்பது எந்த

வகையிலும் நியாயம் இல்லை.

Friday, March 5, 2010

ஆறிலிருந்து அறுபது வரை

என்னடா பழைய ரஜினி படத்தோட விமர்சனம் ? ன்னு கேட்கிறிங்களா ?
இல்லங்க ....

நான் ஒரு இடத்தில பகுதி நேர ஊழியராக இல்ல இல்ல ஆசிரியராக வேலை பார்க்கிறேன்.
அங்கே பல தரப்பட்ட மக்கள் வந்து கணிப்பொறி கத்துக்குவாங்க.
என்னிடம் எட்டு வயது சிறுமி கணிப்பொறி கற்றுக் கொள்ள வந்தாள்.
அவள் எப்பவும் துறு துறுன்னு இருப்பாள். Lab ல சில பேர் அந்த பெண் சுறு சுறுப்பாக
இருப்பதனை ரசிப்பார்கள். அவளுடைய அந்த Hyperactive behaviour, High Energy level (தமிழில்
வார்த்தை தெரியல) அவளுக்கு ஒரு வண்ணத்தை கொடுத்தது.

என்ன சில நேரம் " Bullet மணி "ன்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாள். எப்பவும் எங்கிட்ட " Uncle
உங்க வயசு எத்தன ? என்ன படிச்சிருக்கீங்க ?" ன்னு கேப்பா. எனக்கு எட்டு வயசு ஆகுது அப்படி
சொன்னேன். உடனே பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சுட்டாள்.

இப்படி அவளுக்கு நான் தான் class எடுக்கணும் என்பாள் , அப்புறம் நான் தான் எடுப்பேன். ஆனா
ஏனோ தெரியலை சில பேருக்கு அவளோட அந்த குணம் எரிச்சலை உண்டு பன்னியது.
சில நேரம் இந்த பொன்னுக்கு இந்த வயதிலே எதுக்கு computer சிலருக்கு தொண்றியது.

ஆனால் அவளுடைய அந்த குணம் பிடித்ததினால் மட்டுமல்ல, நான் நினைத்தது என்னவென்றால்
கல்வி கற்பதற்கு மனம் இருந்தால் போதும். வயது விடயமே இல்ல.நான் அவளுக்குரிய எல்லாமும்
சொல்லிக் கொடுத்துவிட்டேன்.ஆனால் பிறருக்கு ஏன் தொண்றவில்லை அவளுடைய வயது தான் அவளுடைய நடவடிக்கைகளுக்கு காரணம் என்று. இந்த மனப்பக்குவத்தை அவர்களுக்கு ஏன் கல்வி கொடுக்கவில்லை

பிறகு சில நாள் கழித்து., இன்னொருத்தவங்க வந்தாங்க. அவங்களுக்கு வயது ஒரு ஐம்பத்தி நான்கு.இவங்கள் எப்பவும் என்னிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பாங்க. அதனால மத்தவங்கள சரிவர கவனிக்க முடியாமல் போனது. ஆனால் இவங்களுக்கு இந்த வயசுல எதுக்கு computer ன்னு எங்கிட்ட பல பேர் கேட்டாங்க.

இவங்க என்ன படிச்சிட்டு வேலைக்கா போகப் போறாங்க, நிச்சயமா இல்ல அப்ப எதுக்கு இந்த
வயசுல இதெல்லாம்ன்னு என் காது பட பேசினார்கள்.
அவங்களுக்கு பாடம் எடுத்தது நான் ஆனா கூட இருக்கிறவங்க ரொம்ப சலிச்சுகிட்டாங்க. ஆனா நான்
அவங்ககிட்ட பார்த்தது கடலளவு ஆர்வம். இந்தளவு ஆர்வம் எனக்கு பள்ளியில படிக்கும் போது கூட
இருந்ததில்லை.அந்த ஆர்வத்த பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

இந்த சமூகம் எந்த ஒரு விஷயத்திலும் பிரதி பலன் எதிர்பார்கிறது. பலன் பாராமல் செயல்
செய்வோரை இந்த சமூகம் என்றும் அங்கீகரிப்பதுமில்லை அதே சமயம் அவர்களை கேலியாகவும்
பார்க்கிறது.நான் படிச்ச school- ல ஒரு motto உண்டு. அறியாமை என்னும் இருளை போக்கும்
விளக்கே கல்வி என்பார்கள்.

அதே பள்ளியில் " நீ நல்லா படி , அப்படி படிச்சா உனக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.
அதனால் நல்ல வேலை கிடைக்கும் ", இப்படி அடுக்கிக் கொண்டே போவார்கள். வேலைக்கு சென்ற
பின்னும் அறியாமை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது அவர்களிடத்தே.

8 வயது சிறுமியும் சரி, 54 வயது கொண்ட பெண்ணும் தங்களது வேலை சரியாகச் செய்கிறார்கள்.
ஏன் வயதை குறிப்பிட்டேன் என்றால் இதை வைத்துதான் இவர்களை generalise செய்கிறார்கள். கல்வி கற்பதற்கு என்று அனுமதிக்கப்பட்டதாக இவர்கள் என்னும் அந்த இளைஞர்,
இளைஞிகள் தங்களின் அறிவின் முதிர்ச்சிக்காகவா கல்வி கற்கிறார்களா ?

அந்த கல்வி என்னதான் மாற்றம் ஏற்படுத்துகிறது நம்மிடையே ?

கல்வி முறைகளில் பிழையா ?

அல்ல வேலைக்கு தேவைப்படும் கல்வி மட்டும் போதும் என்ற எண்ணத்தினால் வந்த தவறா ?

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் இந்த கேள்விகளின் பதில்

போல் இந்த கேள்விகளும் இல்லாமலே போக வேண்டும்.

இதற்கு தீர்வு என்று சொல்லுதல் முறையல்ல. அடுத்தது செயல் தான் தேவை. என் அந்த

செயல்களில் ஒரு முயற்சி தான் இந்த பதிவு. இங்கே ஒரு திசை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, February 14, 2010

நெறியாள்கை - II

ஆவணப் படங்களின் போக்கு இவ்வாறாக செல்ல, வீதியில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருகூத்து என்று நம்முடைய வயல்

வரப்புகளில் வாழ்க்கை நடத்தும் நம்மவர்களின் கலைகள், இன்னும் சொல்ல போனால் நம்முடைய மண்ணின் கலைகள் என்று

இதைத் தான் சொல்ல முடியும் என்பது என் கருத்து.

இது போல் அன்று நான் பார்த்த வீதி நாடகம் என்பது HIV பற்றிய விழிப்புண்ர்வு பிரச்சாரம் என்று நின்று கவனித்து வந்தேன்.

" அந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ? அதாவது அவர்களது வாழ்க்கைக்கு தேவையான் பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி தீர்த்து

கொள்ள முடிகிறது ? " என்றெல்லாம் எனக்குள் கேள்வி எழுந்தது.

அதன் பின் ஒரு நாள், பிரபல வானொலி நிலையமும், ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவன்மும் சேர்ந்து HIV பாதிக்கப்பட்டோருக்காக

புதிதாக ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகர் கமலஹாசன்

இந்த திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் பேட்டி எடுத்தார்.

இந்த பேட்டியின் போது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வோரையும் அவர் பேட்டி எடுத்தார்.

அந்த பேட்டியினை முழுவதுமாக கேட்க முடியவில்லை.

HIV தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வோர், அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும், இவர்களின்

வருமானம் குறைவு.

அழிந்து வரும் கலைகளை ஒரு வகையில் சமுதாயத்தில் இன்னும் தக்கவைக்கவும், நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்

போய் சேரவும் இவர்கள் செய்யும் வேலை [ வேலை என்கிற பேரில் இவர்கள் செய்யும் சேவை ] இவர்களை இன்னும் அழகாகவும்,

உயரமாகவும் காட்டுகிறது.

ஆவணப் படங்களை நெறியாளும் இயக்குனர்களை குறை சொல்லவும், வீதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் கலைஞர்களை

புகழ வேண்டும் என்பது நோக்கமல்ல.

ஏனென்றால் இங்கே ஒருவர் ஹீரோவாக வேண்டும் என்றால் உடனே அவர்களே Minority என்று ஒரு மக்களை Generalise செய்து

அவர்களுக்கு துணையாக இருப்பது போல் காண்பிதது கொள்வார். தயவு செய்து அந்த கூட்டத்தோடு என்னை சேர்த்து விடாதீர்கள்.

நாத்திகமும், பார்பணிய எதிர்ப்பு ஒரு fantasy ஆகிவிட்டது நம்மில் பலருக்கு. இதனை சொல்லவதனால் என்னை பார்பணன் என்றோ,

ஆத்திகன் என்றோ Generalise செய்யவேண்டாம். அந்த மாதிரி இதுவும் ஒண்ணு நினைச்சிடாதிங்க. நம்முடைய கருத்துகளை பிறரிடம்

திணிக்க ஆரம்பிக்கும்பொது தான் பிரச்சனையே.


நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒலி ஏற்படுத்தி மக்களை கூட செய்து, மக்களையே என்ன ? எதற்கு விசாரிக்க வைத்துவிடுகிறார்கள்.

ஆவணப்பட இயக்குனர்களும் சரி, வீதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் கலைஞர்களும் சரி இருவருமே ஒன்றுதான் என்னை
  

பொறுத்தவரை ஆனால் ஆவணப் பட இயக்குனர்கள் தங்களுடைய கதைக் களம் பற்றி எவ்வள்வோ யொசிக்கிறார்கள்., ஆனால்

அந்த படம் எந்த மக்களுக்காக எடுக்கப்பட்டதோ, மக்களைப் பற்றி எடுக்கப்பட்டதோ, அதனை அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பும்,

ரசனையையும் ஏற்படுத்த தவறிவிட்டார்களோ என்ற அய்யத்தின் விளைவு தான் இந்த என் ஆதங்கம்.

நான் இந்த இரு இடுகைகளை எழுதும் இந்த நேரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கும், ஆவணப் பட இயக்குன்ர்களுக்கும்

என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்...

Tuesday, February 9, 2010

நெறியாள்கை - I

ஏதோ வாங்க மிதிவண்டியில் அங்காடித்தெருவுக்குச் சென்று கொண்டு இருந்தேன். போகிற
போது பாதையில் இரண்டு ஆண்கள் மேளம் கொட்ட, பெண்கள் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த பெண்கள் கைகளில் பல வண்ண துணிகைளை கட்டியிருந்தனர். எதற்காக இப்படி ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விசாரிச்சப்ப அவர்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு
மக்களுக்கு வரனும்னு மக்களோட கவனத்த ஈர்க்கரதுக்காகவும் இப்படி செய்கிறதா கேள்விப்பட்டேன்.

HIV பத்தி உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்ல .அத பத்தி போதும் போதும்ன்ற அளவுக்கு உங்களுக்கு ஊடகங்கள் சொல்லியிருக்கும். விளம்பரங்கள் நிறையவே வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இதனை சாதரண மக்களுக்கு இந்த விழிப்புணர்வை கொண்டு சென்றதில் வெறும் தொலைக்காட்சி மட்டும் பங்கு வகிக்கவில்லை. இப்ப தான "இலவச வண்ணத் தொலைக்காட்சி ".
( அதுலயும் நிறைய பேர்க்கு வரலன்னு,இன்னும் நிறைய பேர் அதையும் வித்துடறதாவும் பத்திரிக்கைகள் எழுதுறாங்க )

இதற்கு முன்னாடி மக்களுக்கு HIV,பெண் கல்வி, மேம்பாட்டு திட்டம், போன்ற பல திட்டங்கள கொண்டு போய் யார் சேர்த்திருப்பான்னு யொசிச்சிட்டுருந்தேன். இவர்களைப் போல் வீதி நாடகம் நடத்தற கொண்டு சேர்த்துருப்பாங்களோ ? என்ற கேள்வியுடன்

மிதிவண்டியை அலுத்தினேன்.

நான் அவர்கள் செய்த விழிப்புணர்வு பிரச்சாரம் என்ன பலன் தந்துவிடும் என்று யோசித்தவாறே மிதிவண்டியை மிதித்து கொண்டே யோசித்து என் எண்ணங்கள் பயணித்தது. இந்த ஆட்டமும் பாட்டமும் எந்த விழிப்புணர்வை தந்தற போகுதுன்னு யொசிச்சேன்.

விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தவர்கள் பல்கலை அறிஞர் என்றும் சொல்லிகொள்ளவில்லை, ஆடியவர்கள் ஆட கற்று கொண்டவர்களும் இல்லை.
இவர்கள் பணம் வாங்காமல் இல்லை . வாங்குகிறார்கள் , அந்த சம்பளம் மிகவும் குறைவு அவர்கள் செய்யும் வேலையை
ஒப்பிட்டால்.

இருக்கலாம் இவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் ஆவணப் படங்களை நெறியாளுதலையே தங்களது வேலையாக கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சில பேர். மற்ற நாடுகளில் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. நம் நாட்டை பொருத்தவரை

"ஆவணப் படங்கள், பொழுது போக்கு படங்கள் போல் என்று வெள்ளித்திரைக்கு வரும் ?" என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது.நம்ம மக்கள் இந்த படங்களை பார்க்கரதுக்கான வாய்ப்பையும், இதில் இருக்கும் சுவையையும் புசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்ததவறிட்டோம்.

( படம் போடுறதுக்கு முன்னாடி போடுவாங்கல்ல ( News reel ) ஒரு ஆவணப் படம் அத இதையும் குழப்பிக்காதிங்க)

"அட இந்த படம்லாம் நம்ம ஊர்ல பாக்க மாட்டாங்க சார் " அப்படின்னு சொன்னிங்கன்னா, இந்த ஆவண படங்களே எடுக்க தேவையேயில்லையே என்று யொசித்து கொண்டே பொருட்களை வாங்கினேன்.

வாங்கியவுடன் வந்த பாதையில் திரும்பினேன். மறுபடியும் எண்ணங்கள் பாய்ந்தது....அதே கருத்தை நோக்கி....

போன வருடம் சிறந்த ஆவணப் படத்திற்க்கான ஆஸ்கர் விருது நம்ம ஊருபத்தின படம் Smile Pinki க்கு கிடைச்சுது.படம் எடுத்தது வெளி நாட்டுக்காரங்க பெயர் Megan Mylan
வாய் பிழந்த குழந்தைகள் பற்றிய ஆவண்ம் படம். அப்போ இந்த மாதிரி விருதுக்கு தான் இந்த படங்கள் எடுக்கப்படுகின்றனவா?

மக்களுக்கு நல்ல செய்திகளை, நல்ல சிந்தனையுடனும், நல்ல தொழில்நுட்பத்துடனும் கொண்டு செல்கிற படங்களை அங்கீகரிக்க தான் விருதுகளே தவிர , விருதுகளுக்காக மட்டுமே படம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

வெகுஜனமக்களை இந்த படைப்புகள் சென்று அடைய வேண்டும். மக்களிடம் போய் சேராத படைப்பு , கடலில் பேய்கின்ற மழை போல.அது பூமியில் விழுந்தால்தான் யாவர்க்கும் நலம்.

சமுதாய முன்னேற்றத்தின் பால் இது போல் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளிக்கு நடுவே சில சமுதாயத்தில் பேர்க்காக மட்டும் இந்த வேலைகளில் முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் தங்களோட profile வண்ணமயமாகத் தெரிவதற்கு
இந்த படங்கள் எடுத்து தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்கிறார்கள்.

இந்த ஆவணப் படங்களால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எத்தனையோ இருக்கிறது.

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது இதுலாம் ஒரு விடயமா அப்படின்னு கேட்கலாம்?

இந்த தொடர்பு மூலமாக நாட்டுல எந்த பிரச்சனையும் தீத்தரலாம். Kim Phuc Phan Thai என்ற 9 வயது சிறுமி தன் உயிரை நெருப்பிடம் இருந்து காப்பாற்றி கொள்ள நிர்வாணமாக வியட்நாம் போரின் போது ஓடினாள். அந்த போரின் கோரத்தை உலகிற்கு
ஒரு புகைப்படைமாக அந்த பெண் ஒடியதை எடுத்து வெளியிட்டார் Nick Ut.

இந்த புகைப்படம் பின்னாளில் அந்த போரை நிறுத்த காரணமாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறினார்கள்.



ஒரு புகைப்படம் இவ்வளவு சாதித்திரிக்கிறது என்றால் ஆவணப் படங்களால் நாட்டிலில் உள்ள அத்தனை பிரச்சனைகளோடும்

போராட முடியும் என்று நினைத்து கொண்டிருக்கையில் கடந்து வந்த பாதையில் அந்த வீதியில் அதே விழிப்புணர்வு கூட்டம்

இன்னும் நடந்து கொண்டு இருந்தது.

இவர்களது செயல் சமுதாயத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துகிறதா ? என்றால் அதனை நான் சிந்திக்காமலே விட்டுவிட்டேன்.

அடுத்த இடுகையில் ......

Saturday, January 16, 2010

வண்ணமும் வாசனையும்


11-1-2010
காலை 5 மணி 48 நிமிடங்கள்

நான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்தேன். அந்த காலை வேலையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.
நான் நடமாட்டம் குறைவாக உள்ள இடம் தேடி அமர்ந்தேன்.
என் கையேட்டை திறந்து நான் அப்போதைக்கு முடித்திரிந்த என்னுடைய பயணத்தை பற்றி ஏதாவது எழுதாலம் என்று நினைத்து அம்ர்ந்திருந்தேன். இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் நான் வீட்டிற்க்கு செல்வத்ற்காண பேருந்து நிலையத்திற்கு வந்துவிடும். நான் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

அதற்குள் ஏதாவுது எழுத வேண்டும் என்று நினைத்து நான் சென்று வந்த பெங்களூரூ பற்றி எழுத தலைப்பட்டேன்.

சிந்தித்து கொண்டிருக்கையில், ஒரு ஆணும் , பெண்ணும் என்னை கடந்து சென்றனர், அவர்கள் தம்பதியாக இருக்ககூடும். கடந்து போகையில் ஒரு இடத்தில் கழிவு நீர் தேங்கியிருந்தது. அந்த ஆண் கழிவு நீர் பாதையில் போகாமல், வேறு பாதையில் சிறிதாக துள்ளி கடந்து சென்றார். அந்த பெண்ணோ கழிவு நீர் தேங்கியிருந்த பாதையில் நடக்க முற்படுகையில், இரு முறை வாந்தி எடுப்பது போல் குமட்டினாள், அந்த கழிவு நீரின் "மணம்" சுவாசிக்க முடியாமல்.

"அட , இதில் என்ன இருக்கு ?"ன்னு கேட்கலாம்.

அந்த இடத்திற்க்கு பக்கத்திலேயே நாலு பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த "மணம்" குமட்டலைத்தரவில்லையா?

ஓ !!! பழக பழக கழிவு நீரின் "மணம்" கூட புடிச்சுபோயிரும் போல.

சிறிது நேரம் கழிந்த பின்
மணிபால் மாநிலத்தில இருந்து இருபதுக்கும் அதிகமான பேர் இளைஞர்கள், இளைஞிகள் சுற்றுலா வந்தாங்க. அவங்களும் அங்கேயே அமர்ந்தாங்க.
அவங்க என்ன பண்ணாங்க
காதுல போட்டுருந்த muffler-a மூக்குக்கு போட்டுட்டாங்க.

இவ்வாறு அங்கே ஒவ்வொன்றாக நடக்க அடுத்த ஒருவர் வந்தார்.

ஒரு பெரிய தகரத்தை கொண்டுவந்தார். கையில் சாயங்க்ள் பல வைத்த்ரிந்தார். அவரை பார்த்தவுடன் கடைக்ளில் பெயர் பலகைகளில் வண்ணம் தீட்டுபவர் என்று நினைத்தேன். நான் நினைத்தது சரிதான், அவர் தன்னுடைய சாயங்களை சரியான விகிதங்களில் கலந்து கொண்டிருந்தார்.
அவருடைய வண்ணங்களால் அந்த தகரம் பதாகை ஆகும் என்று எண்ணி அவர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்பில் அமர்ந்திருந்தேன்.


அந்த ஓவியர் ஒரு கயிலி,ஒரு டீ சட்டை அணிந்திருந்தார். கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.

தன்னுடைய தகரத்தை தன் வண்ணங்களால் பெயர் பதாகையாக மாற்றிக் கொண்டு இருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் வேலையில் ஒரு புத்திசாலித்தனம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.
" டேய் ! அதில என்ன புத்திசாலித்தனம் கண்ட " என்று கேட்கலாம்.
இருந்துச்சு. paint-ன்,நேரத்தின் அளவை கணக்கிட்டு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார்.

பதாகையில் எங்கும் பிழையில்லை என்று சொல்லலாம் அவ்வளவு அழகாக தீட்டியதாக எனக்கு தோண்றியது.

இதையெல்லாம்விட அந்த ஓவியர்தான் வரைந்த நேரத்தில் ஒரு தடவை கூட கழிவு நீரின் 'மண'த்தால் முகம் சுழிக்கவில்லை, தன் மூக்கை கூட மூடவில்லை.
இந்த விடயத்தை நான் உணர்ந்தது அவர் தன் வேலை முடித்துவிட்டு ஓவியம் காய காத்திருக்கும் போது தான்.
அந்த ஓவியர் ரசித்து வேலை செய்ததால் தன்னை சுற்றி இருந்த அத்தனையையும் கவனிக்க தவறினார்.
மணிபாலில் இருந்து வந்த பயணிகளையோ, கழிவு நீரின் மணமோ, அவரை வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்த நானோ , அவரது கவனத்தை கவர தவறிவிட்டோம்.


காரணம் யொசித்து பார்த்தேன், வண்ணங்கள் அந்த ஓவியரின் மனதில் எல்லா வகையான உணர்ச்சிகளான இன்பம், துன்பம், கோபம்,அமைதி, அறுவறுப்பு அனைத்தையும் சமமாக வைத்துக் கொள்ளும் போல.
கண் பசியோடு உணவு உண்ணும் போது, காதோ, மூக்கோ, நாக்கோ எதையும் உண்ண மறுக்கிறது போலும்.

ஓவியம் வரைவதையே தன் வாழ்க்கையாக கொண்டவர்கள் வாழ்வில் வறுமை இருக்கலாம் ஆனால்
ஆழ்மனதில் ஓர் அமைதியும், இன்பமும் இருக்கவே செய்கிறது.

இது வண்ணங்களின் சக்தியா ? இல்லை மாயையா?

ஓவியரின் ஓவியம் மட்டும் அல்ல , அந்த ஓவியர்கள் கூட வண்ணமயமாகத் தெரிகிறார்கள்.
அதனாலோ என்னமோ அந்த கழிவு நீரின் 'மணம்' எனக்கும் தெரியவில்லை அவ்வளவு நேரமாக அங்கேயே நான் அமர்ந்திருந்தும்.