Friday, March 5, 2010

ஆறிலிருந்து அறுபது வரை

என்னடா பழைய ரஜினி படத்தோட விமர்சனம் ? ன்னு கேட்கிறிங்களா ?
இல்லங்க ....

நான் ஒரு இடத்தில பகுதி நேர ஊழியராக இல்ல இல்ல ஆசிரியராக வேலை பார்க்கிறேன்.
அங்கே பல தரப்பட்ட மக்கள் வந்து கணிப்பொறி கத்துக்குவாங்க.
என்னிடம் எட்டு வயது சிறுமி கணிப்பொறி கற்றுக் கொள்ள வந்தாள்.
அவள் எப்பவும் துறு துறுன்னு இருப்பாள். Lab ல சில பேர் அந்த பெண் சுறு சுறுப்பாக
இருப்பதனை ரசிப்பார்கள். அவளுடைய அந்த Hyperactive behaviour, High Energy level (தமிழில்
வார்த்தை தெரியல) அவளுக்கு ஒரு வண்ணத்தை கொடுத்தது.

என்ன சில நேரம் " Bullet மணி "ன்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாள். எப்பவும் எங்கிட்ட " Uncle
உங்க வயசு எத்தன ? என்ன படிச்சிருக்கீங்க ?" ன்னு கேப்பா. எனக்கு எட்டு வயசு ஆகுது அப்படி
சொன்னேன். உடனே பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சுட்டாள்.

இப்படி அவளுக்கு நான் தான் class எடுக்கணும் என்பாள் , அப்புறம் நான் தான் எடுப்பேன். ஆனா
ஏனோ தெரியலை சில பேருக்கு அவளோட அந்த குணம் எரிச்சலை உண்டு பன்னியது.
சில நேரம் இந்த பொன்னுக்கு இந்த வயதிலே எதுக்கு computer சிலருக்கு தொண்றியது.

ஆனால் அவளுடைய அந்த குணம் பிடித்ததினால் மட்டுமல்ல, நான் நினைத்தது என்னவென்றால்
கல்வி கற்பதற்கு மனம் இருந்தால் போதும். வயது விடயமே இல்ல.நான் அவளுக்குரிய எல்லாமும்
சொல்லிக் கொடுத்துவிட்டேன்.ஆனால் பிறருக்கு ஏன் தொண்றவில்லை அவளுடைய வயது தான் அவளுடைய நடவடிக்கைகளுக்கு காரணம் என்று. இந்த மனப்பக்குவத்தை அவர்களுக்கு ஏன் கல்வி கொடுக்கவில்லை

பிறகு சில நாள் கழித்து., இன்னொருத்தவங்க வந்தாங்க. அவங்களுக்கு வயது ஒரு ஐம்பத்தி நான்கு.இவங்கள் எப்பவும் என்னிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பாங்க. அதனால மத்தவங்கள சரிவர கவனிக்க முடியாமல் போனது. ஆனால் இவங்களுக்கு இந்த வயசுல எதுக்கு computer ன்னு எங்கிட்ட பல பேர் கேட்டாங்க.

இவங்க என்ன படிச்சிட்டு வேலைக்கா போகப் போறாங்க, நிச்சயமா இல்ல அப்ப எதுக்கு இந்த
வயசுல இதெல்லாம்ன்னு என் காது பட பேசினார்கள்.
அவங்களுக்கு பாடம் எடுத்தது நான் ஆனா கூட இருக்கிறவங்க ரொம்ப சலிச்சுகிட்டாங்க. ஆனா நான்
அவங்ககிட்ட பார்த்தது கடலளவு ஆர்வம். இந்தளவு ஆர்வம் எனக்கு பள்ளியில படிக்கும் போது கூட
இருந்ததில்லை.அந்த ஆர்வத்த பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

இந்த சமூகம் எந்த ஒரு விஷயத்திலும் பிரதி பலன் எதிர்பார்கிறது. பலன் பாராமல் செயல்
செய்வோரை இந்த சமூகம் என்றும் அங்கீகரிப்பதுமில்லை அதே சமயம் அவர்களை கேலியாகவும்
பார்க்கிறது.நான் படிச்ச school- ல ஒரு motto உண்டு. அறியாமை என்னும் இருளை போக்கும்
விளக்கே கல்வி என்பார்கள்.

அதே பள்ளியில் " நீ நல்லா படி , அப்படி படிச்சா உனக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.
அதனால் நல்ல வேலை கிடைக்கும் ", இப்படி அடுக்கிக் கொண்டே போவார்கள். வேலைக்கு சென்ற
பின்னும் அறியாமை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது அவர்களிடத்தே.

8 வயது சிறுமியும் சரி, 54 வயது கொண்ட பெண்ணும் தங்களது வேலை சரியாகச் செய்கிறார்கள்.
ஏன் வயதை குறிப்பிட்டேன் என்றால் இதை வைத்துதான் இவர்களை generalise செய்கிறார்கள். கல்வி கற்பதற்கு என்று அனுமதிக்கப்பட்டதாக இவர்கள் என்னும் அந்த இளைஞர்,
இளைஞிகள் தங்களின் அறிவின் முதிர்ச்சிக்காகவா கல்வி கற்கிறார்களா ?

அந்த கல்வி என்னதான் மாற்றம் ஏற்படுத்துகிறது நம்மிடையே ?

கல்வி முறைகளில் பிழையா ?

அல்ல வேலைக்கு தேவைப்படும் கல்வி மட்டும் போதும் என்ற எண்ணத்தினால் வந்த தவறா ?

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பரவாயில்லை ஒரு நாள் இந்த கேள்விகளின் பதில்

போல் இந்த கேள்விகளும் இல்லாமலே போக வேண்டும்.

இதற்கு தீர்வு என்று சொல்லுதல் முறையல்ல. அடுத்தது செயல் தான் தேவை. என் அந்த

செயல்களில் ஒரு முயற்சி தான் இந்த பதிவு. இங்கே ஒரு திசை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

0 கருத்துக்கள்: