Monday, March 29, 2010

இந்த பஸ் எந்த ஊருக்கு போகும் ?

பஸ் டிரைவர்...அரசு விரைவுப் பேருந்து, மாநகரப் பேருந்து, சுற்றுலா பேருந்து, கல்லூரி பேருந்து அப்படின்னு சொல்லிட்டே போகலாம்.
ஓவ்வொருத்தருக்கும் இந்த பஸ் டிரைவர் பத்தி மனசுக்குள் ஒரு உருவகம் இருக்கும். நாம் நம் வாழ்வில் சந்தித்த ஏதோ ஒரு டிரைவர் நம் மனதிற்கு வருவார்.

பொதுவாக டிரைவர்கள் என்றால் கருத்த உதடுகள் ( புகைப்புடிப்பதினால் உதடுகளுக்கு கிடைத்த நிறம் ), ஒரு புகையிலை வாசனை, மயிற் மெதுவாக கொட்ட ஆரம்பித்து வழுக்கை விழும், அடிக்கடி டீ சாப்பிட சொல்ல நினைக்கும் மனது என்று பெரும்பாலும் இப்படி தான் இவர்கள் மனதில் வலம் வருவார்கள்,இவர்கள் விதிவிளக்கு இருக்கவே செய்கிறார்கள்.

நானும் ஒருவருடனும் பழக்கமானேன். அவர் ஒரு கல்லூரி பேருந்தின் டிரைவர்.
அந்த அண்ணன என்னுடன் வேலை செய்த எல்லோருடனும் நன்றாக பழகுவார். நாங்கள் கணிப்பொறி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். அவர் அங்கு கணிப்பொறி கற்றுக்கொள்ள வந்தார்.

கற்றுக் கொள்ள வந்தவர் எங்களிடம் வகுப்பு நேரம்போக எங்களிடம் பல கதைகள் சொல்வார்.
கதைகள் எல்லாம் யாரோ ஒருவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்வார் ஆனால் யாருடைய பெயரையும் சொல்ல மாட்டார். கதைகள் கொஞ்ச "கில்மா" கதைகளாக இருக்கும்.

டிரைவர் வாழ்க்கையில் இருக்கும் அந்த சங்கடங்கள், சுவாரஸ்யங்கள் என அனைத்தும் சொல்வார்.

அவர் ஏதோ ஒரு கல்லூரிப் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த கல்லூரிக்கு பல பேருந்துகள் உண்டு.
ஊருக்கு வெளியே இருந்த அந்த கல்லூரிக்கு போகும் போது , ஒவ்வொரு பேருந்துக்கும் இடையில் ஒரு போட்டி நிலவும். ஆனால் இந்த போட்டி illegal racing
எப்போது ஆரம்பிக்கும் என்றால் City Limit தாண்டிய பின் தான். இங்க வயது வித்தியாசம் என்ற பேதம் கிடையாது.
போட்டிகளில் வயதான இளைஞர்கள் கூட முதலில் இலக்கை அடைந்து விட்டுவிட்டு " சு*!@$#%  ... யார்க்கிட்ட ,,,, போடா உன் வயசு என் அனுபவம்டா  ", அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் போவார்களாம்.

வழிவிட்டு அமைதியாக செல்பவர்களும் உண்டு.

இப்படி நாம் இவர்களை யோசிக்கும் போது அழகாக தெரியும் இவர்களையே

இந்த பஸ்ஸை தவிர வேறு வாகனங்களில் நம்மில் பலர் பயணம் செய்தால் அந்த வாகன ஓட்டுனரின் பார்வையில் இந்த பஸ் டிரைவர் கண் முன் தெரியாமல் ஓட்டுபவர் போல தெரிகிறார் பெரும்பாலான சமயங்களில்.
அந்த வாகன ஓட்டுனர் பஸ் டிரைவரை எப்படியாவது ஓரிரு வார்த்தைகள் திட்டுவார்.

இந்த வாகன ஓட்டுனர் மட்டுமல்ல , சாலையோரங்களில் நடந்து செல்லும் எந்தவொரு சாமனிய மனிதனும் இந்த பஸ் டிரைவர்களை பழிக்கத்தான் செய்கிறார்கள்.

சரி ... இப்ப இந்த டிரைவர்கள் இவர்கள் நம்மில் பலர் நினைப்பது போல் அகங்காரத்துடன் பேருந்து ஓட்டுகிறார்களா ?

இவர்கள் இயக்கும் இந்த வண்டியின் அளவு இவர்களுக்கு இந்த பிம்பத்தை தருகிறதா என்றால் ? ம்ம்ம்ம் இருக்கலாம்....

அந்த டிரைவர் அண்ணே என்கிட்ட சொல்லும் போது அவர்களில் சிலர் வண்டியினை வேகமாக செலுத்துவே செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் வெறிபிடித்து ஓட்டுவதில்லை என்று சொன்னார். They are not Maniac.
ஆனால் அவருக்குள் ஒரு கனவு, ஒரு ஆசை என்னவென்றால் அவருக்கு இந்த பஸ்ஸை ஓட்டும் பணியிலிருந்து வேறு நல்ல மேஜை பணிக்கு செல்ல விரும்பினார். அவர் அத்தனை வருடம் பேருந்து ஓட்டிய காலம் சிறு விபத்துகளை சந்தித்திருக்கிறார்.
தன்மேல் தவறில்லை என்றாலும் சிலரை இரண்டு மணிக்கு ஒருவரை ஒரு மருத்துவமனையில் செர்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சில நேரம்  அந்த மனிதனின் வலி, இரத்தம், அந்த பாவம் தன்னையோ தன் குடும்பத்தையோ பாதிக்குமோ என்ற பயத்தில் தான் அந்த வேலையை விட்டு செல்ல நினைக்கிறேன் என்பார்.
ஒரு மனிதனின் மனமே அவனுக்கு எதிராக செயல்படுமாயின் அது உளவியல் ரீதியாக சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றே.
அவர் தன் வாழ்வில் நடக்கும் எந்த அசம்பாவித தற்செயலாயினும் அது என்றோ தான் ஏதாவது உயிரில் வலி ஏற்படுத்தியதன் காரணமாக இருக்குமோ என்று அவர்களது மனம் கேள்வி கேட்டு சித்தரவதை செய்யும்..

இந்த மனச்சூழல் சாதாரணமாக யாருக்கும் வரக்கூடியதே. ஆனால் இவர்கள் உயிர்களோடு சம்பந்தப்படுவதால் விளைவுகளும் உயிர்களோடு சம்பந்தப்படுமோ என்ற பயம் தொனிக்கும்.

இங்கே எத்தனை பேர் The Machinist என்ற திரைப்படத்தை பார்த்திரிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.Brad Anderson நெறியாள Christian Bale நடிப்பில் வெளிவந்த படம் இது. இந்த படம் இடித்துவிட்டு ஒடும் டிரைவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார்கள்.

சேரி இதுல நாம என்ன பண்ண முடியும் ? அப்படின்னா...நாம ஒவ்வொருத்தருகிட்டையும் போயும் உங்களுக்கு அந்த பிரச்சனையா ?  இல்ல இந்த பிரச்சனையா ? கேட்க வேண்டாம்.

கெட்டத நல்லதால அறுப்போம்.
இந்த டிரைவர்கிட்ட பயணம் முடிஞ்சு "தேங்க்ஸ்.. நல்லா ஓட்டினிங்க " அப்படின்னு ஒரு பிரயாணி சொன்னார். பெருமையா இருந்தது.
இது என்னோட தீர்வு இல்ல அந்த பிரையாணியோடது. 

சார் இந்த பஸ் எந்த ஊர்க்கு போகும் கேக்குற நாம பயணம் முடிஞ்சு ஏன் ஒரு நன்றி சொல்ல கூடாதுன்னு தோணுச்சு

இந்த இடுகைய படிக்கிற எந்த ஒரு பேருந்து ஓட்டுனருக்கும் உங்களுக்கு மற்றவர் உங்களை தூற்றுகிறார் என்ற எண்ணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் உங்களுக்கு என்னுடைய சாரி அப்புறம் நன்றி.



6 கருத்துக்கள்:

மதுரை சரவணன் said...

பேருந்து ஓட்டுனருக்கு நல்ல வழித்தடம் உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்

Anonymous said...

In Taiwan, Driver say thanks for the passengers.
- Velu

சிநேகிதன் அக்பர் said...

//சார் இந்த பஸ் எந்த ஊர்க்கு போகும் கேக்குற நாம பயணம் முடிஞ்சு ஏன் ஒரு நன்றி சொல்ல கூடாதுன்னு தோணுச்சு//

நல்ல கேள்வி.

அருமையான இடுகை. தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் இடுகையை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

ஹுஸைனம்மா said...

சாதாரணமாகக் கடந்து போகும் மனிதர்களின் பார்வையையும் அழகாக எழுதிருக்கீங்க. உண்மைதான், ஒரு புன்சிரிப்பு, நன்றி அவர்களுக்கு இன்னும் ஊக்கம் தருமே, நமக்கு வரும் பின்னூட்டங்கள் போல்!!

எவனோ ஒருவன் said...

அனைவருக்கும் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

@ Madurai Saravanan @அக்பர்
@ Anonymous

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

@ ஹுசைனம்மா

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
தங்கள் கருத்துக்கள் பின்னனூட்டம் அல்ல முன்னூக்கங்கள்

ஹுஸைனம்மா said...

Thanks :-))