Monday, April 6, 2009

புழுதிகடல்

வணக்கம் அனைவருக்கும் ...
என் நண்பன் பிரபு என்னை வெகு நாட்களாக blog எழுத வற்புறுத்தினான். இன்று தான் அத்ற்கான நேரம் வந்தது.
ஆனால் இந்த blog எழுதுவதற்கு வெகு நாட்க்ளாக எனக்கு mental block இருந்தது. காரணம் முதலில் என்னிடம் பிறரிடம் சொல்ல பொருளும், காலமும் இல்லை என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டு என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

நம் மனம் தான் நம்மை சில விசயங்களை செய்யவும் வைக்கிறது . செய்யவிடாமல் தடுக்கவும் செய்கிறது.
ஒவ்வொரு மனிதனிடமும் இந்த உலகதிற்க்கு சொல்ல நிறைய இருக்கிறது.
இந்த நம்பிக்கையில் blog ல் என் பயணத்தை தொடற்கிறேன்.

என்னுடைய தலைப்பு எண்ணப் புழுதி கடல் .
இதனை கடலில் இருந்து வரும் புழுதி என்றாலும் சரி ,
கடல் போல் பெரியதாய் வரும் புழுதி என்று எடுத்துகொண்டாலும் சரி
ஆனால் கடலில் இருந்து வரும் புழுதியில் எப்பொழுது தூசி இருக்காது ,மாசு இருக்காது.
எப்படி எனக்கு காலமும் , பிறருக்கு சொல்ல செய்தியும் இல்லை என்று நினைத்து நான் என்னை நானே சமாதானம் செய்து கொண்டேனோ , அந்த காலங்களில் இருந்து இப்பொழுது வரை எனக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னை இதையாவது செய்ய சொல்லி வெகு நாட்களாக என்னை தொந்தரவு செய்தது.

" இவ்வளவு Build up குடுக்கிரியே அப்படி என்ன எழுதப் போற ? " ன்னு தான கேக்குரீங்க.
நம் வாழ்வும் வாழ்வு சார்ந்த அமைப்புகளும், அதனுள் காணப்படும் குறைகளையும் , அதற்கான தீர்வுகளையும் இங்கே ஆராய்வோம் என்று சொல்லுவேன் நினைக்காதீங்க...
அத பத்தியும் எழுதுவேன்.
என் வாழ்விழும் என்னை சுற்றிய இந்த உலகம் எனும் சமுதாயத்தில் நடைபெற்ற, நடைபெறும், நடைபெறப் போகும் சம்பவங்களை என்
பார்வையில் இருந்து உங்களுக்கு காட்ட முயல்கிறேன்.


எழுத்து சுதந்திரம் என்பதை மனதில் கொண்டு, யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல், மனதிற்கு தொண்றும் கருத்தை சொல்ல முயற்சிக்கிறேன்