Thursday, February 17, 2011

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு

புத்தகம்.....


புத்தகம் என்பது ஏதோ ஒரு பொருளை கையாளும், அது புத்தகத்தின் இறுதிவரை விவாதிக்கப்படும்.
வார இதழ், மாத இதழ் போன்றவை இதற்குள் வராது.
இப்படிப்பட்ட புத்தகம் எழுதுவதுற்கு பெரும் அறிவும், அனுபவமும் தேவை என்ற சிந்தனை எனக்குள் பல நாட்களாக தோண்றியது...
ஒரு எழுத்தாளன் தன் கருத்தை எழுத்துக்களால், சொற்களால் பதிவு செய்கிறான்.


ரொம்ப நாளாக நான் எழுத்தாளர்கள் மேல் ஒரு வகையான மரியாதை என்பதை தாண்டி ஈர்ப்பு கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம்.


எழுத்தாளர்களின் எழுத்துக்களை விட அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கை எத்தகையானதாக இருந்திருப்பின் அவர்களிடம் இருந்து இத்தகைய எழுத்துக்கள் வந்திருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டிருப்பேன். நான் அவர்களது வாழ்க்கையைப் பற்றியே நிறைய அறிய நினைத்தேன்.


இன்னும் சொல்லப் போனால் சாதாரண வாழ்க்கை மேற்கொள்ளும் ஒருவன் எப்பொழுது எழுத ஆரம்பிக்கிறான் ?
 ஆராத் துயரிலா ?     உச்சக் கட்ட இன்பத்திலா ?
நஷ்டத்திலா ?    லாபத்திலா ?
நிறைய கற்றபின்பா ?
அல்ல இவை எல்லா மாறி மாறி வாழ்க்கையில் பார்த்த பின் இனி வாழ்வில் சாதிக்கவோ , இழக்கவோ ஒன்றுமில்லை என்ற நிலையிலா?


இந்த உலகம் என்னும் பெரிய நிலப்பரப்பில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்கு உரிமைக்கும் சிவப்பு  சாயத்தில் எழுதுவரொ ?
 
இதில் ஏதோ ஒரு நிலை என்றாலும் அதற்கும் நிச்சயம் ஒரு விதிவிளக்கு இருப்பார்.


சில நேரங்களில் ,வாழ்வின் சந்தோஷம் துக்கம் எண்ணங்கள் பேச்சு போன்றவற்றை எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்களோ என்று கூட சிந்திக்க தோண்றும்.
எழுத்தாளர்கள். ஒரு பொருளை யாரும் அணுகாத வண்ணம் ,சில நேரங்களில் புதியதாக இல்லாமல் போனாலும், ஆனால் அவர்களுக்கே உரியே தனித்துவமான கோணத்தில் அணுகுவார்கள்.


 நான் படித்த புத்தகங்களை விட நான் படிக்காமல் பாதியில் விட்ட புத்தகங்கள் அதிகம் ம்ம்ம்ம் மிக மிக அதிகம். பல எழுத்தாளர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்கும் அளவுக்கு அவர்கள் புத்தகம் ஞாபகம் இருப்பதில்லை. வெட்கப் படுகிறேன். நான் வேகமாக படிக்கும் பழக்கம் கொண்டவன் அல்ல அது கதை புத்தகங்களாகவே இருந்தாலும். நான் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் எழுத்தாளர் சொல்லவரும் கருத்தை சரியா என்று சில நாள் யோசிப்பேன்.அது வரை வாசிக்க மாட்டேன் அதன் பின் அந்த புத்தகம் என்னை படிக்க தூண்டும்,
 சில நேரங்களில் சில நல்ல புத்தகங்கள்
அந்த இடைவெளியில் என் கையை விட்டு சென்றுவிடும். பின் தேடுவேன்.


தவறு என் மேல் தானே தவிர அந்த எழுத்தாளர்கள் மேல் அல்ல.


இன்னொரு அல்பமான காரணம் என்னவென்றால் எனக்கு என்றாவது ஒரு நான் எழுத்தாளன் ஆவேன் என்றும் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை படிப்பதினால் ஏதோ வகையில் ஏதோ ஒரு எழுத்தாளர் தன் எண்ணங்களினாலோ சொற்களினாலோ என்னிடம் பாதிப்பு ஏற்படுத்திவிடுவாரோ என்ற பிரம்மை, பயம், குழப்பம் என்று கூட சொல்லலாம்.


அதெல்லாம் உண்மை இல்லை என்று இங்கு எழுத்தாளர்களாக இருக்கும் மறுக்கலாம்.


இந்த வகையான எண்ணம் வரக் காரணம் அந்த எழுத்தாளர் பெயர் சொல்ல விரும்பவில்லை.
மேற்கத்திய எழுத்தாளர் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை படித்தேன்.
இரண்டுமே எனக்கு ஒரே வகையான எண்ணங்களைத் தந்தது. இதனால் நான் புரிந்து கொண்டது ஒரு விஷயம் நமக்கு பிடித்துவிட்டாலோ நம்மை பாதித்துவிட்டாலோ, நம்மை அறிந்தோ அறியாமலோ நம் எழுத்துக்களில் அந்த சிந்தனைகள், எண்ணங்கள் வந்து தொற்றிக் கொள்ளும்.


எழுத்தாளார்களின் வலிமை காலத்தை கடந்து நிற்கும். உதாரணம் பல.
திருவள்ளுவர் முதல் நாளை எழுதத் தொடங்கும் அடுத்த எழுத்தாளன் வரை. எழுத்துக்கள் என்ன புரட்சியா செய்து விட முடியும் ?
பாப்லோ நெருடாவின் வரிகளை பாடிக்கொண்டே மக்கள் சிலியின் கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறியவில்லை ?.  காதலையும் வீரமும் சொன்ன எத்தனை எழுத்தாளர்கள் எல்லா மொழிகளிலும்.
இவர்கள் எல்லா எழுத்தாளர்களும் சமூக மேம்பாட்டுக்காகத்தான் எழுதியிருக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு வீரம் இருக்கும் , செருக்கு இருக்கும். இவை இருப்பதால்தான் என்னவோ எழுத்துக்கள் ஆரோக்கியமாகப் பிறக்கின்றன.


பலருக்கு சிலரை பார்த்து "இவரெல்லாம் ஏன் எழுத வரனும் அப்படின்னு தோணும் ?".
சரியான வாசகர்களாலேயே நல்ல எழுத்தாளன் உருவாகிறான், ஆனால் ஒரு விஷயத்தை மறந்திவிடக் கூடாது வாசகர்களுக்குக்காக தான் எழுத்தாளன், எழுத்தாளனுக்காக வாசகனில்லை....
சத்தமில்லாமல் ஜன்னலோரம் உக்கார்ந்து புத்தகம் எழுதிவிட்டு, பிரதிகளை விற்று காசாக்கும் நோக்கோடு எழுதப்படும் எந்தவொரும் எழுத்தும் விடிகாலையில் காணாமல் போகும் மேகம் போல் காணாமல் போகும்.


வகைப்படுத்திகிறான் இவன் "அவன்" தான் நினைக்க வேண்டாம் , கம்யூனிஸ்ட் தோழர்களின் எழுத்துக்கள் என்றுமே சமூக நலன் சார்ந்த பார்வையாக இருக்கும்.
இவர்களின் எழுத்துக்கள் எளிதாக இருக்கும் ஆனால் சமூக அவலங்களை எதிர்ப்பதிலும் , மக்கள் நலம் காப்பதிலும் இவர்களின் எழுத்துக்கள் மிகவும் வலிமையுடையனவாக இருக்கும். இவர்களின் எழுத்துக்களில் வக்கிரம் இருக்காது. வரலாறுகளில் இருந்து நிறைய மேற்கோள்கள் இருக்கும்.
தோழர்கள், அவர்கள் எழுதும் எழுத்துக்கு ஏற்ப களத்தில் இறங்குவார்கள், போராடுவார்கள். அவர்களுக்கு ஏனோ சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்களது போராட்டமும் வெளவெளத்து போய்விடுகிறது.
இவன் கம்யூனிஸ்ட் தான் என்று நினைப்பவர்களுக்கு:- நான் இதுவரை ஒரு தோழரின் புத்தகம் கூட படித்ததில்லை, ஆனால் அவர்களின் கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
நான் கம்யுனிஸ்ட் என்று சொல்வதில் வெட்கப்படவில்லை ஆனால் அப்படி நினைத்தால் அவர்களைப் போல் களத்தில் நான் எல்லா சமயங்களிலும் இறங்கிப்போராடியதில்லை.


பெண் எழுத்தாளர்களின் ஆதிக்கம் இலக்கியத்திற்கு அவசியம். சங்க இலக்கியத்துலேயே பெண் புலவர்கள் இருந்தாங்க. ஔவையார்ல ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்கிற அத்தனை பெண் எழுத்தாளர்களும்.
அருந்த்ததி ராய் எழுத்தாளர் என்பதை தாண்டி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறார், ஆனால் அவர்கள் ஆயுதம் ஏந்துதல் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயுத இல்லாமல் இந்த நாட்டிற்கே சுதந்திரம் வாங்கினோம். எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் எழுத்தாளனுக்கு சமுதாயத்தின் கட்டமைப்புக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.


குழந்தை எழுத்தாளர்கள் ரொம்ப முக்கியமான பங்கு வகிக்கிறாங்க. சின்ன வயசில நிறைய நீதி நெறி கதைகள் படிப்பேன். அந்த கதைகள் எனக்கு யோசிக்க கத்துகொடுத்தது,
ஆனால் அப்ப எனக்கு தோணல, இப்ப மலைக்கிறேன். அந்த கதைகள் எழுதினவர்களுக்கு வயது எப்படியும் மிக அதிகம் இருக்கும் ஆனால் குழந்தைகளின் மனம் போல் எப்படி எழுதினார்கள்...?

சில எழுத்தாளர்கள் குறித்து நான் அறிந்த சில சுவையான செய்திகள் என்னவென்றால் கதையில் கதாபாத்திரங்கள் சந்தித்தித்துக் கொள்ளும் இடங்களாக அவர்கள் நினைத்து கொள்ளும் இடங்களுக்கு அவர்களே சென்று அந்த இடங்களில் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்றும் அதை பொறுத்து தன் கதை மாந்தர்களின் செயலும் வசனும் இருக்கும்படி செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.


நம் தமிழ் நாட்டில் எழுத்தாளர்களை பற்றியோ அல்லது சில எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறை வெள்ளித்திரையில் பதிவு செய்யாது இருப்பது வருந்ததக்க விசயமே. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகளும், பலரின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தகம் படிக்கும் இயல்பு இல்லாதவர் கூட ஏதோ ஒரு வகையில் அந்த திரைப்படங்களினால் எழுத்தாளனின் எண்ணங்களினால் ஈர்க்கவோ பாதிக்கவோ படலாம்.


யார்கிட்டயாவது உங்களுடைய பொழுது போக்கு என்னன்னு கேட்டா ? அதிகம் சொல்லறது "புத்தகம் படித்தல்". அது எவ்வளவு உண்மை உங்ககிட்டையே விட்டுறேன்.
மறுபடியும் எந்த புத்தகம் உங்களுக்கு பிடிச்ச புத்தகம் கேட்டா மேற்கத்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள்தான் சொல்வாங்க. நம்மில் எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறர்கள் என்று கூட தெரியாமல் போய்விட்டது. முக்கியமாக எனக்கு.

உங்க எல்லார்கிட்டையும் ஒரு வேண்டுகோள் நீங்க படிச்சதிலேயே மிகச் சிறந்த புத்தகமாக எதக் கருதிரீங்க ?  எழுத்தாளர் பெயர் ? ஏன் ? 
எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை.


என்னைப் போல் கத்துக்குட்டி வாசகனுக்கு பரிந்துரைக்கின்ற தமிழ் எழுத்தாளர்களை பட்டியலிட்டால் மிக்க நலம் .
{
 பிரபலமானவர்களை தவிர மற்ற ஆசிரியர்களை பட்டியலிட    
விரும்பிகிறேன் 
}
  


நன்றி