Friday, March 26, 2010

காதல் காதல்

நான் இப்படி ஒன்றை எழுதுவேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை. நான் சின்ன பையங்க எனக்கு ஒன்னு தெரியாது


எனக்கு இதில் எப்பொழுதும் ஆர்வம் அவ்வளவாக இருந்ததில்லை. என் பள்ளி நாட்களிலிலும் சரி, இப்போது முடிந்த என் இளங்கலை கல்வி கல்லூரி நாட்களிலிலும் சரி நான் எந்த பெண் அவ்வளவாக மயங்கியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் சிலரிடம் CRUSH இருந்திருக்கிறது...
அதனை இதோடு நான் குழப்பிக்கொள்ளவில்லை ...
குழம்பியிருந்தால் நான் காதல் வயப்பட்டுருப்பேனோ என்னவோ..?
நான் பலரிடம் நன்றாக பழகுவேன்.

அந்த பெண்களும் அப்படித்தான். அவர்களும் குழம்பவில்லை.

ஆனால் எனக்கு ஈடுபாடு இல்லை...ஏன் என்றால் தெரியவில்லை...
யார் கண்டார் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?

இவ்வாறு போக...
என் நண்பர்கள் பலர் ஏன் எல்லாரும் என்று கூட சொல்லலாம் யாரையோ காதலித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களை நன்றாக கேளி செய்வேன். இந்த காதல் செய்றவர்களை கேளி செய்வதே தனி சுகம்.
இவர்களில் பெரும்பாலானோர் ஒரு தலை ராகங்கள் தான்.
 3 மாதம், 10 மாதம், 2 வருடம், 3 வருடம் ஏன் 7 வருடம் கூட ஒரு தலை ராகம் பாடியவர் உண்டு.அவர்கள் தனியாக சிக்கினாலும் சரி, கூட்டமாக சிக்கினாலும் சரி ஓட்டி எடுத்துவிடுவோம்.

இன்னொரு கூட்டம் என்ன வகை என்றாலும் காதலை சொல்லிவிடுவார்கள்.
ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பாள். இவர்கள் கண்களில் கண்ணீர்.
சில சமயம் அந்த பெண்ணை தூற்றும் ஆண்களை பார்த்திருக்கிறேன், அவள் நன்றாக வாழ எண்ணியவரை பார்த்திருக்கிறேன்,பெருமைப்பட்டு, ஆச்சரியப்பட்டும் இருக்கிறேன். "இன்னும் உங்கள மாதிரி ஆள் இருக்காங்களான்னு"

மாமா பொண்ணு, அத்தை பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு காதல். எப்பா! இவனுங்க காதல்ல எங்கெங்கிருந்தோ வில்லன் வர்றான் அப்படிம்பாங்க.
 அசல்ல ஒரு மாப்ளன்னோன இங்க இவருக்கு புளிய கரைக்கும். வேற வழியில ஒரு சொந்தக்காரன் மாப்ளன்னு வந்து நின்னுருவான்னு பயம் . கதைல டூவிஸ்ட் இருந்திகிட்டே இருக்கும்.

அடுத்த கூட்டம் இரு பாலரும் மாங்கு மாங்குன்னு என்று காதலிப்பார்கள். திடீர் என்று ஒரு பிரேக் அப். காரணமே இருக்காது. அப்புறம் புலம்பல். அன்பு ஏங்குறது.

அப்புறம் உள்ளவங்க, ஹார்மோன் கடலன பொங்க, அந்த தீ அணைக்க காதல் என்னும் பெயர் வைத்துக் கொள்ளும் புத்திசாலிகள். என்னை கேட்டால் இவர்கள் களவும் பாலருடனே வாழ்ந்து வந்தாலே போதும் திருமணம் என்று தேவையே இல்லை. நான் பல சமயம் இவர்கள் செய்வதுதான் உண்மையான
ககாடததலலலோ என்று "வியந்திருகிறேன்"
ஆதி மனிதன் இனவிருத்திக்காகத்தானே துணை தேடினான்.
 அப்ப எதுக்காக ஒருத்தி கூட மட்டும் வார்த்தை சேர்த்தன்னு கேட்டிங்கன்னா , பாலியல் நோய் பரவாது, குழந்தை மனவளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் தாயிம் தந்தையிம் சேர்ந்திருந்தால்.

இப்படி நிறைய வகையா சொல்லலாம் காதல்ல.
ஆனால் நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது எங்கள் கல்லூரி போரட்டத்த சந்திச்சப்ப நாங்க மரத்தடியில வகுப்பு முடிந்து இன்டெர்வல் அப்ப சுதந்திரமாக யோசிக்கும் போது, என் நண்பர்கள் கிட்ட சொன்னேன் " லவ் பண்ணி மேரஜ் பண்ணா ஜாதி கொடுமை, ஏற்றத் தாழ்வு, ஜாதிகளுக்கான so-called-identity காணாமல் போக வாய்ப்பிருக்கில்ல ?" அப்படின்னு கேட்டிக்கிட்டோம். அப்ப அதான் டாப்பிக்.

ஆமான்ற ஒரு முடிவுக்கு வந்தோம்.  நானே எதிர்பாக்கல எங்கிட்ட இருந்து அப்படி ஒரு முடிவ. லவ் பண்றவங்கள சந்தோஷமாக பார்க்க ஆரம்பித்தேன்...

சில நாட்கள் கழித்து என்னை சுற்றிய காதல் ஜோடிகள் அனைத்தும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அறிந்தேன்.
 அதன்பின் தான் அறிந்தேன் ஓரே வகுப்பை சேர்ந்த மக்களாய் இருப்பதால்தான் அவர்கள் காதலர்கள் என்று தங்களுக்குள்ளேயே அடையாளம் காணப்படுகிறார்கள் என்று.
" ஏன் ?" கேட்டால் ஓரே பதில் " Easily Attainable and Accessible  ".
 நாம் அடைந்து விடுவோம் என்ற ஒரே காரணத்தினால் காதலிக்கிறீர்கள் என்றால் ? இப்படி ஒரு காதல் தேவை தானா ?
 இப்படி காதலித்து ஜாதி காப்பாற்றி கொள்ளும் இன்னும் பழமை வாதியாக வாழும் காதலர்களின் காதல் தலைகுனியட்டும்.

ஆனால் என்னுடன் பயின்ற,வாழ்ந்த, வாழப்போகும் நண்பர்களுக்கு நீங்கள் காதலிக்கும் பெண் தற்செயலாக வகுப்பு இருந்து உங்களுக்கு எந்த எதிர்ப்பு வராத பட்சத்தில் உங்களுக்கு வாழ்த்துகள்.

ஜாதி , மததிற்காக, உங்கள் காதலை என்றும் விட்டு கொடுக்க வேண்டாம்.
Never Compromise Love for " Something that means only in paper"

0 கருத்துக்கள்: