Monday, April 12, 2010

கரைமேல் பிறந்தார்கள்

நான் என்னுடைய இளங்கலை இரண்டாமாண்டு ஒரு பாடம் Ecobiology ஆய்வுக்கு Field Experiment -க்காக
இராமநாதபுரத்திற்கு கல்லூரி நண்பர்களோடு சென்றேன்.

என்னடா திடீர்ன்னு இராமநாதபுரம் பற்றி ...?


என் அண்ணனோட நண்பர் ஓமன் சென்று வந்தது பற்றி பேசும்போது அங்கிருக்கும் மீனவர் பற்றி சொன்னார்.அங்கிருக்கும் மீனவர் சிலர் ஒரு பெரிய மீன் பிடித்தால் போதும் அதுவே பெரிய விலைக்கு போகும் என்று சொன்னார். இதை நான் எங்கோ கேட்ட ஞாபகம்....

இராமநாதபுரம்...

நாங்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் காலை 6.40 மணிக்கு மாட்டுத்தாவணியில் பேருந்தில் ஏறினோம். பேருந்து சிறிது நேரம் கழித்து கிளம்பியது.
மதியம் 2 மணி அளவில் ராமநாதபுரம் நெருங்கினோம்.
எங்களது வேலை 24 மணி நேரம் தொடர்ந்து சோதனை செய்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கடலில்,காற்றில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவென்றும் அது எப்படி மாறுபடுகிறது என்றும் கணக்கிட வேண்டும். இன்னும் பல parameters எடுத்துக்கொள்ள முடிவு செய்தோம், செஞ்சோம்.

ஆனால் இதெல்லாம் செய்ய நாங்க தேர்ந்தெடுத்த Spot  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் என்ற இடத்தை தான்.
இன்னும் சரியாகச் சொன்னால் அங்கிருந்து சில தூரம் தள்ளி இருக்கும், அதாவது அந்த பாம்பன் பாலம் இங்கிருந்து தொடங்கும் இடத்தில் தான் எங்களது "Spot".
 அந்த இடத்தோட பெயர் தோணித்துறை.
அங்கே ஒரு சிறிய தேவாலயம் இருக்கும் அங்கே தான் தங்கினோம். இந்த இடத்தில் எந்தவொரு கடைகளும் இருக்காது. எது வேண்டும் என்றாலும் மண்டபம் 'ஊரு'க்குள் தான் போக வேண்டும்

இத்திசையில் இது இந்தியாவின் நிலப்பரப்பு முடியும் இடம். இது தாண்டி இராமேஸ்வரம் ஒரு தீவு போல் இருக்கும்.
அதனை நமது நிலப்பரப்போடு இணைக்கும் பாலம் தான் அன்னை இந்திரா காந்தி பாலம் அதாவது பாம்பன் பாலம்.இந்திய அரசியல் ஆதிக்கம் பல தீவுகளுக்கு இருக்கிறது. நாங்கள் இராமேஸ்வரம் செல்லவில்லை.

 எங்களுடன் வந்த சமைக்க தெரிந்த இரண்டு ஆசிரியர் அல்லாத கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள் ( அவர்களை 'அண்ணே'ன்னு தான் கூப்பிடுவோம்) வந்தார்கள்.
மண்டபத்தில் வண்டியில் இருந்து மாணவர்கள் நாங்கள் மூன்று பேரும், அந்த அண்ணன்கள்ல ஒருத்தர் மட்டும் இறங்கினோம்.
அந்த மூன்று பேரில் ஒருத்தன் நான், மற்ற இருவர் என்னுடன் படித்த முத்துகுமார், லோகநாதன்.விடுதியில் வேலைபார்த்த அந்த அண்ணன், நாங்கள் மட்டும் மண்டபத்திலே இறங்கியதன் காரணம் எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு, தேநீர், முதலியவற்றை தயார் செய்து நாங்கள் தங்கவேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லதான்.
 எங்களிடம் சொன்ன இல்ல இல்ல இட்ட கட்டளை என்னன்னா கண்டிப்பா இரவுக்கு அனைவருக்கும் மீன் இருக்க வேண்டும் என்பது.அது ஆசிரியரின் அன்புகட்டளை.
பேருந்தை விட்டு இறங்கியவுடன் அந்த ஊரின் உப்புக்காற்று என் மூக்கை மட்டுமல்ல உடலையும் சேர்த்து குலுக்கியது. என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை மூச்சுவிடும்போதெல்லாம் அந்த உப்பின் 'மணம்' மனதை உளுக்கியது.
நான் அங்கே இருக்க போவது ஒரு இரண்டு நாள் இங்கேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்தவங்க ? நினைச்சு பார்க்க முடியல...
இப்படி யோசிக்க கூட நேரமில்லை எனக்கு அப்ப....
மாலைக்குள் அத்தனை பொருட்களையும் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
எங்களது தேவைகள் என்னவாக இருந்ததுனா சமைக்க மீன்,விறகு,பாத்திரம்,பால்,கொண்டு செல்ல வாகனம்.
முதலில் வாடகைக்கு ஒரு டிரைசைக்கிளை அமர்த்தினோம்.
டிரைசைக்கிள்கார அண்ணே தெரிஞ்ச கடைகளுக்கு கூட்டிட்டு போனார். விறகு வாங்கினோம்.
 விறகு கடை வச்சிருந்தவர் இலங்கை அகதி,தன் சொந்த நாட்டில் மறுக்கப்பட்டவர்கள் என்று பேசி தெரிஞ்சுகொண்டேன்.
வெயில் தலையை சுளிர் என்று விழ எங்களுக்கோ ஜீவினில்லை.
அந்த இடத்தில பல கடைகள் இருந்தது. ஆனால் எனக்கு தெரிந்தது ஒருத்தர் கூட சிரித்து நான் பார்க்கவில்லை.

பாத்திரக்கடை சென்று வாடகைக்கு பாத்திரம் கேட்டோம். யாரும் தர முன் வரவில்லை. எவ்வளவு பணம் கேட்கிறார்களோ அந்த பணத்தை தருவதாக சொல்லியும் யாரும் தரவில்லை.
காரணம் என்று பாத்திரக்கடைகாரரிடம் கேட்ட போதுதான் சில பேர் வந்து இது போல் வந்து வாடகை பாத்திரம் வாங்கிட்டு கள்ளத்தோணியில் வேறு தேசம் சென்றுவிடுவதாக சொன்னார்.
நாங்கள் எங்களது ID CARD காண்பிச்சு பேசி எப்பிடியோ பாத்திரம் வாங்கிட்டோம்.மற்ற பொருட்களை எல்லாத்தையும் வாங்கினோம்.
இதுக்கே அந்த வெயிலுக்கு அந்த உப்புக்காத்துக்கு என் உடல் ஆற்றல் வெகுவாக குறைஞ்சிடுச்சு. நாக்கு வரண்டுறுச்சு.

இதுல டிரைசைக்கிளை வேற தள்ளிட்டு போனோம் மூணு பேரும்.
கொஞ்ச தூரந்தான். போன உடனே கடல போய் விழுந்தவன் தான் 3-4 மணி நேரம் கடலிலே கிடந்தேன்.

இரவு 7.30 மணி நானும் நண்பர்களும் பாம்பன் பாலத்தின் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
அப்போ பாலத்தில் ஒரு சின்ன பையன் ஒரு கயிற கீழ தொங்க விட்டுட்டு அங்கிட்டு இங்கிட்டு நடந்துகிட்டே இருந்தான். என்ன ? எதுக்கு ? கேள்விகள் பல எனக்கு. கேட்டு பார்த்ததுக்கு என்னனா அந்த தூண்டில் போட்டிருக்கானா அந்த ஒரு சில பெரிய வகை மீன் தான் மாட்டுமாம். 
இந்த மீன் ஒன்னே சுமார் 500 ரூபாய்க்கு விற்கலாம் என்றும் கூடை கூடையாக விற்று லாபம் பார்ப்பதை காட்டிலும் இந்த ஒரு சில மீன்கள் தந்துவிடும் என்றும்.
Smart Work அவன் பண்றத நினைக்கும் போது அவன் சொல்ல கூடாது அவரை புருவத்தை தூக்கிப் பார்க்க வைக்கிறது.
ஆனால் அவர் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் இரவும் அந்த ஒரு சில  மீன்களோடு முடிந்துவிடுமோ என்பதில் தான் என் பயமே.

அடுத்த நாள் கடலில் விளையாடிக்கொண்டிருந்தேன் எல்லாரும். சில படகுகள் கரையில் ஒதுங்கியிருந்தது.
படகில் இருந்து டைவ் பண்ணி கடலில் இருந்து குதித்து குளித்துக்கொண்டு இருந்தேன்.
பெரியவர் ஒருவர் வந்து எங்களை " எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் குளிங்க ஆனால் போட்ல மட்டும் ஏறாதிங்க. ஹெலிகாப்டர்ல ரௌண்ட்ஸ் வர்ற கார்ட்ஸ் கள்ளத்தோணி ஏற்றதா நினைச்சு விசாரிக்க ஆரம்பிச்சுருவாங்க ".
அப்படின்னு சொன்னார்.
இந்த அரசாங்கம் என்ற இந்த System என்னால புரிஞ்சுக்கவே முடியல. நாட்ட ஆகாய மார்க்கமாக கண்கானிக்கற இந்த அரசாங்கம் கரைகளில் வாழும் இவர்களை சொந்த நாட்டிலே வாய்ப்புகளும், வாழ்வும் வருவதற்கு ஏன் எந்த கண்காணிப்பு நடத்த மாட்டேங்கிறது.
ஊரிலிருந்து இவர்கள் தள்ளி கரையோரைங்களில் வாழ்வதனால வாய்ப்புகளும் திட்டங்களும் இவர்களுக்கு தெரிவதில்லையோ.
இலங்கை தமிழர்களை அகதிகள் என்று பெயர் வைக்கிறோம். ஆனால் கறையோரங்களில் வாழும் இவர்கள் சொந்த நாட்டிலே அகதிகளாக நடத்தப் படுவது என்ன ......................................................................
...............................................................................................................................................................................................
................................................................................................................................................................................................

இங்கே இடம் விட்டதற்கு காரணம் இவர்களை இப்படி ஆக்கியவர்களை கண்டுகொள்ளவோ, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வோ உங்கள் எண்ணங்களால் நிரப்பிக் கொள்ளத்தான்.

இவங்களுக்கு ஏதாவது செய்யணுங்க கண்டிப்பா.
இந்த இடங்களில் மட்டும் வாழ்வதற்கு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்க்கையை வாழ இயன்ற முயற்சி செய்கிறார்கள். முயற்சியில் இவர்களுக்கு உப்புகாற்றும் தெரிவதில்லை, வெயிலும் தெரிவதில்லை.

அன்று இரவு முழுக்க நான் தூங்காமல் கடலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.


3 கருத்துக்கள்:

தோழி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

Prabhu said...

உனக்குன்னு ஒரு டெம்ப்ளேட் கிடைக்குது பாரு!

எவனோ ஒருவன் said...

@பப்பு
நான் எழுதினத பத்தி யாரும் ஒண்ணு கருத்து சொல்ல மாட்டேங்கிறிங்க ..
'டெம்பெளேட் பத்தி சொல்ரிங்க'
அப்ப எந்த லட்சனத்துல எழுதறேன்னு புரியுது...
:)))
சூப்பர்