Monday, March 22, 2010

மறக்க முடியாத 21

மனிதன் யோசிக்க தெரிந்த, சிரிக்க தெரிந்த மிருகம் என்று பலர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.
இந்த வாக்கியம் எவ்வளவு உண்மைமிக்கது ?
ஆனால் மனிதரில் சிலர் தங்களது தனித்தன்மை அறியாது அஃதாவது தான் யார் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

இவர்களை பெரும்பாலும் நம்மில் பலர் ஓரே வார்த்தையில் இவர்களை "பைத்தியம்" என்ற வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள் இவர்களது பிரச்சனை என்னவென்று தெரியாமல்.

22 மார்ச் 2010 அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பலர் பார்த்திருக்ககூடும்.அந்த நிகழ்ச்சி Down's Syndrome என்ற குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய நிகழ்ச்சி.

Down's Syndrome இருக்கும் நபர்களிடம் மனிதனின் மரபணுவில் 23 குரோமோசோம் ஜோடிகளில் 21 ஆம் ஜோடியில் மட்டும் ஜோடி குரோமோசோம் பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கும் (Trisomy என்பார்கள் ).
 மார்ச் 21 உலக டௌன் சிண்ட்றோம் நாள் ஆகும்.
பெயர் காரணம் பிரிட்டிஷ் மருத்துவர் John Langdon Haydon Down என்பதில் இருந்து வந்தது

ஒவ்வொரு 800 குழந்தைகளுக்கும் ஒரு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பது புள்ளிவிவரம்.
ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் இருக்கும் போதே அதுவும் 11 முதல் 13 வாரங்களுக்குள் நாம் பரிசோதித்து பார்க்கலாம் பிறக்க போகும் அந்த குழந்தை Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டதா என்று கூறுகிறார்கள்.
எதற்கு ?
இந்த உயிரை கருவிலே அழிக்கவா ?

இவர்களை மருத்துவம் செய்வதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று சாரார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் பண்புகள் என்றால்



எதையும் புரிந்துகொள்ளும் திறன் (Cognitive Ability) குறைவாக காணப்படும்

வாலிப பருவத்தில் உள்ளோர் தீவிர மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் பார்வையில் குறைபாடு இருக்கவே செய்கிறது.

வாய், காது, தலை,கழுத்து இவர்களுக்கு சிறிதாக இருக்கும்.

 நாக்கு வாயுடன் உள்ளே ஒட்டி இருக்கும்.

கண் பெரிதாக இருக்கும்.
மற்றவர்களை விட இவர்கள் வெகுவாக வித்தியாசப்படுவது இவர்களுக்கு இருக்கும் குறைந்த Reflex Action & Poor Muscle Tone.

இன்னும் இவர்களுக்கு பல மருத்துவ பக்கவிளைவுகள் இருக்கவே செய்கிறது.அதனை Treatment செய்துவிடலாம் என்கிறார்கள்.

இவர்களுகென்று மாத்ரூ மந்திர் என்று அமைப்பு சென்னையில் இருக்கிறது. இந்த அமைப்பு Down's Syndrome ஆல் பாதிக்கப்பட்டோருக்கு என்று சிறப்பு பயிற்சி நடத்தி வருகிறது.

கடந்த 10 வருடங்களில் 4000 குழந்தைகளை இவர்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்கிறார்,  இந்த அமைப்பின் தலைவர் Dr.லேகா ராமச்சந்திரன்.
இவர்கள் இசைக்கருவிகள் இசைக்கிறார்கள், நீச்சலடிக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள்.
பரத நாட்டியம் ஆடுகிறார்கள்.

இந்த குழ்ந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் இவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் அல்லாத மற்ற பள்ளிகள் இவர்கள் என்னதான் தகுதியுடைவர் என்று நிருபித்தாலும் இடம் கொடுக்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது.
இந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் மற்ற குழந்தைகளுக்கு (Feeling of Apathy) தன்னை போல் பிறரை நினைக்கும் பண்பு வ(ள)ரும், என்பது என் கருத்து.

Dr.லேகா ராமச்சந்திரன் இந்த குழந்தைகள் எதையும் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்களால் முடியாதது என்று எதுவும் இல்லை.
இவர்கள் போதிய பயிற்சி பெற்ற பின் கூட மற்ற பள்ளிகள் சேர்க்காதது, அந்த பள்ளிகளுக்கு தான் நஷ்டமே என்றார், காரணம் இந்த குழந்தைகளின் மூலம் மற்ற குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கை, அன்பு பெருகும் என்றார்.

நம்ம ஊர்ல தான் " +2 Results " போயிடும் மதிப்பெண் குறைவாக வாங்குகிற மாணவரை அந்த வருடம் அந்த மாணவரெல்லாம் பரீட்சை எழுத விடாம பள்ளிகள் தடுக்கிறது. ஓரே வகுப்புல ஒன்னா படிச்சவனுக்கே இந்த நிலைமைன்னா இந்த சிறார்க்கு யார் இடம் கொடுப்பா ?

இந்த பள்ளிகளிடம் இருந்து வரும் பதில் " They should go for Special school,This is a Competition world. 
This world has become a Race, they can't cope up with that ".

ஆனால் மாத்ரூ மந்திர்க்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்களை வாழ்த்த வயதில்லை.

இந்த டௌன் சின்றோம் குழந்தைகளை ஆக்கப் பூர்வமாக உருக்குவாக்குவோர் கையில் சேர்த்தால் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்
ஏனென்றால்
சுற்றியிருக்கும் குதிரைகள் இடித்து தள்ளிவிட்டு ஓடி விடும்.
ஏன் கேட்டா " Life is a Race" ன்னு நம்ம கிட்டயே தத்துவம் பேசுவானுங்க.
வாழ்க்கை ரசிக்க தெரியாதவனுங்க.

இந்த பள்ளிகள் நாளைய உலகுக்கான மனிதர்களை வளர்கிறதா அல்ல ஓடி பிழைக்க குதிரைகளை தயார் செய்கிறதா ?

3 கருத்துக்கள்:

தோழி said...

உண்மை தானுங்க... தொடர்ந்து சொல்லுங்க...

ஹுஸைனம்மா said...

இந்த நிகழ்ச்சி நானும் பார்த்தேன்; எழுதணும்னு நினைச்சிருந்தேன். நீங்க இன்னும் நல்லா விளக்கமா எழுதிருக்கீங்க.

எவனோ ஒருவன் said...

@ தோழி

கருத்துரையிட்ட தோழிக்கு நன்றி

@ ஹூசைனம்மா

டௌன் சிண்ட்றோம் பற்றி பலர் அறிந்ததை நினைத்து மகிழ்ச்சி