Sunday, March 14, 2010

பெண்ணே மன்னித்து நிற்க... சச்சினுக்கு நன்றி...

இந்த இடுகை சச்சின் டெண்டுல்கர் தனது 200* ரன்கள் ஒரு நாள் போட்டியில் எடுத்த போதன்றே

வெளியிட விரும்பினேன். ஏனோ சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே போனது.

மார்ச் 8 அன்று வெளியிட தலைப்பட்ட போது அன்று பல வலைத்தளங்களில் மகளிர்கான பல

இடுகைகள். பத்தோடு பதினொன்றாக என் இடுகை இருக்க விருப்பமில்லை என்று சொல்லவில்லை.

அந்த இடுகைகளை படிக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது.இந்த இடுகை தள்ளிப் போனது.

மகளிர் தினம் முன்னிட்டு எத்தனையோ இடுகைகள் மகளிர் மசோதா பற்றி, பெண் கல்வி, பெண்ணுரிமை,

'எனக்கு பிடித்த 10 பெண்கள்' என்று எத்தனையோ இடுகைகள். ஒவ்வொன்றும் அவ்வள்வு கருத்தூன்றச்

செய்யக் கூடியவை.

இந்த இடுகைக்கும் சச்சினுக்கும் என்ன சம்பந்தம் என்றால் சச்சின் தொட்ட அந்த 200* என்ற அந்த

சாதனை செய்த அன்று ரவி சாஸ்திரி ஒரு comment கொடுத்தார். இந்த கிரஹத்தில் 200* ஒரு நாள்

போட்டியில் 200 ரன் தொட்ட ஒரே வீரர் இவர் தான் என்றார். எனக்கு பொறி தட்டியது. உடனே அவரது

பெயரை Wikipedia தட்டி Go என்ற Button-ஐ சொடுக்கினேன்.

சச்சினின் சாதனகள் இருந்தது. அதற்கு கீழே Belinda Clark என்ற பெண்ணை பற்றி ஒரே வரி இருந்தது.

சச்சின் இப்பொழுது தொடும் சாதனையை பெலிண்டா கிளார்க் என்ற பெண் 1997 ல் 229 ரன் எடுத்தார்.

பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடிய அவர் 229 ரன்களை 1997 ல் Denmark அணிக்கு

எதிராக மும்பையில் எடுத்தார்.

அந்த வருடம் பெண்கள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக் கோப்பை 1973 ஆம் ஆண்டிலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.

ரவி சாஸ்திரி சொன்னது ஒரு வகையில் தவறு. இந்த கிரஹத்தில் 200 ரன்கள்

முதலில் எடுத்தவர் இந்த பெண் என்று எண்ணும்

ஆச்சரியமும் பெருமையும் உண்டு எனக்குள்.

வருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால் இவரை பற்றி பலருக்கு

தெரியாமல் போனதுதான்.

இந்த பெண்களின் திறமையினையும் தீறத்தையும் நாம் இவரை பற்றி

தெரியாதவருக்கு சொல்வதற்கே இந்த வகையான இடுகைகள்.

ஆனால் சச்சின் 200* ரன் எடுக்காமல் இருந்திருந்தால் நான் இவரை பற்றி

தெரியாமலே போயிருப்பேன்.

ஒருவர் சாதனை செய்தால் இந்த உலகம் உற்றுப் பார்க்கும் என்பார்கள்.

ஆனால் பெண்கள் செய்யும் சாதனைகள் கூட இன்னொருவரின்

 சாதனையோடு ஓப்பிட்டு பாராட்டினால் அது எப்படி தகும் ?

" ஒரு ஆண் சாதனை செய்த பின் தான் பெண்களின் செயல்களோடு அதனை

ஓப்பிட்டபின் தான் பெரிதாக பேசுவீர்களா ? " என்று பெண்ணியம் கேட்டால்

நமது பதில் " மன்னிப்பு " மட்டும் தான் என்று சொல்லி தப்பிப்பது எந்த

வகையிலும் நியாயம் இல்லை.

8 கருத்துக்கள்:

டக்கால்டி said...

சச்சின் 200 அடித்த அந்த வாரத்திலேயே பெலிண்ட கிளார்க்கை பற்றிய இடுகையை யாரோ எழுதியிருந்ததாக ஞாபகம். யாரென்று என்னால் சரியாக இங்கே நினைவு கூற இயலவில்லை...இருப்பினும் நீங்கள் தாமதமாக இவ்விடுகையை வெளியிட்டதால் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயமாக இது ஆகிவிட்டது...

வாழ்த்துகள் நண்பா...தொடர்ந்து எழுதுங்கள்...

Unknown said...

லேட்டானும் லேடேடஸ் வந்திருக்கிரிங்க

piesasu said...

Very good...
Keep writing...

cheers

எவனோ ஒருவன் said...

@டக்கால்டி
Belinda clark பற்றி எழுதிய இடுகைகளையும், சச்சின் பற்றிய இடுகைகளையும் எண்ணிக்கையை ஓப்பிட்டால்,
சச்சினைப் பற்றியே அதிகம் இருக்கும்.
இந்த கருத்தைதான் நான் வலியுறுத்த விரும்பினேன்.

எவனோ ஒருவன் said...

@ A.Sivasankar , @ Piesasu

நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல கருத்து, நல்ல பதிவு,

அந்த 229 ஓட்டங்கள் சர்வதேச போட்டிகளா? தல

எப்படியாகினும் வாழ்த்தியே தீரவேண்டும்

Prasanna said...

Very good post..

எவனோ ஒருவன் said...

தாமததிற்கு வருந்த்துகிறேன்

@sureஷ்(பழனியிலிருந்து)
சர்வதேச போட்டிகள் தான் சகோதரரே

@பிரசன்னா
நன்றி