Wednesday, March 17, 2010

நான் படிக்காத பள்ளிகூடம்

நான் வெளியே ஊர் சுற்றிப் பார்க்கும் இயல்புடையவன் அல்ல. இருந்தும் அன்று நான் என் வேலை நிமித்தமாக ஊரின் புறநகருக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது ஊரின் புற நகரில் இருக்கும் பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்தது.
 நானும் என்னுடன் வேலைப் பார்ப்பவரும் சென்றோம்.

 அது ஒரு கிராமத்து பள்ளிக்கூடம் என்றறிந்தேன்.

நான் அதுவரை நான் அப்படியொரு பெண்கள் பள்ளிக்கூடம் கண்டதில்லை, சொல்லப் போனால் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை பார்த்ததேயில்லை.

பள்ளிக்கு பின் ஒரு கால்வாய், ஒரு பாதுகாப்பு கிடையாது. பள்ளிக்கட்டடத்திற்கு நடுவே ஒரு பாலடைந்த, பாதி இடிந்த ஒரு கட்டிடம் இருந்தது. அந்த இடிந்த கட்டிடத்தில் உடைந்த கருங்கற்கள், செங்கல்கள், சறிந்து விழும் நிலையில் இருந்தது.

எந்த நிலையிலும் யார் தலையில் வேண்டுமானாலும் விழ நேரலாம்.
சுத்தம் என்று எங்குமே பார்க்க முடியவில்லை.

பள்ளியின் படிக்கட்டுகளில் ஒரு நாய் தூங்கிக்கொண்டிருந்தது. அந்த ஆண் நாய் சொறி பிடித்திருக்ககூடும் என்று தெரிந்தது பார்த்தவுடன்.

அந்த நாய் யாரையும் கடித்தால் Rabbies நோய் தாக்க கூட வாய்ப்பிருக்கிறது. யாரும் அந்த நாயை விரட்ட மாட்டார்களா என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

பள்ளிக்குள்ளே தின்பண்டங்களுக்கான ஒரு அங்காடி இருந்தது.பொருட்கள் யாவும் சுத்தமின்றி ஈ மொய்த்துக் கொண்டு இருந்தது.

அப்புறம் ஆசிரியைய பார்க்க போனேன். அவங்க மதிய உணவு உண்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டு கொண்டுருந்தார். அங்கிருந்த எல்லா ஆசிரியயையும் சொல்ல மாட்டேன், ரொம்ப சிலரை தவிர பலர்
மெனக்கெடுவடதும்,அற்பணிப்பும் இல்லை. சிலரில் ஒருவர் மென்பொருள் தொடர்பாக என்னிடம் சந்தேகம் கேட்டார்.

அந்த பள்ளியில் இணையதள வசதி இருந்ததால் ஒரு சின்ன open source
மென்பொருளை தறவிறக்கி நிறுவினேன்.

 

அந்த ஆசிரியையின் அந்த updation சிறிது மகிழ்ச்சி தந்தது. வரும்போது நான் வசிக்கும் இடத்தில் வசிக்கும் ஒருவரை பார்த்தேன். அவரது மகனை ஒரு பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.
" ஏன் தான் பணி செய்யும் அரசு பள்ளி போல் ஆண்கள் பயில்வதற்கான் அரசு பள்ளியில் ஏன் படிக்கவைக்கவில்லை ? " பதில் யோசித்தேன் எனது இந்த இடுகையை மீண்டும் படித்தேன்....
பதில் கிடைத்தது...
கேள்வியிலே பதிலும் ...பதிலிலேயே கேள்வியும் இருப்பது
 ஒன்றும் விந்தையில்லையே

என்னையும் இம்மாதிரி பள்ளிகளில் என் தந்தை சேர்க்காததன் காரணம் புரிந்தது இந்த பள்ளிகளில் உள்கட்டமைப்பும், எல்லா ஆசிரியர்களிடமும் மெனக்கெடுதல் சரிவர இருப்பதில்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் இந்த இந்த மெட்ரிக் பள்ளிகளில் மட்டும் மேலே சொன்ன எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் " இல்லை " என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பெரும்பாலும் வருமான ரீதியாக பின் தங்கியவர்களாகவும், காப்பகத்தில் வள்ர்க்கப்படுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் இந்த பள்ளிகளில் கூட படிக்க மறுத்துவிட்டால் இவர்களை இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.

+2 வகுப்பு முடிந்தவுடன் பெரும்பாலும் இந்த பெண்களுக்கு திருமணம் பெரும்பாலும் தன் உறவினனுடன் நடந்துவிடுகிறது.
வெகு சிலரே இந்த கிராமங்களில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக உயர்கல்வியோடு பறக்கிறார்கள். பலரது சிறகுகள் தங்களது வீடுகளுக்குள்ளேயே ஓடிக்கப்படுகிறது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பும், ஆசிரியரின் மெத்தனப்போக்கும் இல்லாமல், பள்ளிகளில் பெண்களுக்கு அடுத்து தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், படிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஆசிரியர் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.
அந்த நிலைமை இயல்பு நிலையில் வந்திருந்தால் என்னை போன்றோர் மெட்ரிக் பள்ளிகளில் படித்திருக்க மாட்டோம்.இனி வந்தால் எங்கள் தலைமுறை இந்த பள்ளிகளிலேயே படிக்கும்.

வருமா அந்த நாள் ?

6 கருத்துக்கள்:

மதுரை சரவணன் said...

அய்யா, இன்று மதுரையில் கார்பரேசன் பள்ளிகள் கான்வெண்ட் பள்ளிகளுடன் போட்டி போட்டு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முறையாக செயல் பட்டால் நிச்சயம் நிலமை மாறும். தகவலுக்கு நன்றி.

Unknown said...

vanthom vaasitthom

எவனோ ஒருவன் said...

@ Madurai Saravanan
அய்யா , உள்கட்டமைப்பில் அரசு பள்ளிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாதது.
ஆனால் நான் பார்த்து வருந்திய ஒரு பள்ளியை பற்றிய பகிர்வு இது.

@ A. சிவசங்கர்
வந்ததற்கும் மகிழ்ச்சி வாசித்ததற்கும் மகிழ்ச்சி

ஆராய்வு said...

வாசிக்கும் போது மனது கனத்தது. இது தொடர்பாக ஏதாவது செய்ய முடியாதா என மனது துடிக்கிறது. சமூக சிந்தனையுள்ள அரசியல்வாதிகள், அமைப்புகள் அல்லது கமல் மாதிரி நடிகர்கள் யாராவது ஏதாவது செய்ய முன்வரமாட்டார்களா?
நீங்கள் இதை சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்றவற்றிற்கு அனுப்ப முயற்சி செய்யலாமே...எப்படி என்றாலும்
மொக்கை பதிவுகளை எழுதி தள்ளுகின்ற ஒரு சூழலில் சமூக சிந்தனையுடன் எழுதுகின்ற உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள். (நான் தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).

எவனோ ஒருவன் said...

@ ஆராய்வு
//
வாசிக்கும் போது மனது கனத்தது. இது தொடர்பாக ஏதாவது செய்ய முடியாதா என மனது துடிக்கிறது. சமூக சிந்தனையுள்ள அரசியல்வாதிகள், அமைப்புகள் அல்லது கமல் மாதிரி நடிகர்கள் யாராவது ஏதாவது செய்ய முன்வரமாட்டார்களா?
நீங்கள் இதை சஞ்சிகைகள் பத்திரிகைகள் போன்றவற்றிற்கு அனுப்ப முயற்சி செய்யலாமே..
//
தங்களது துடிப்பே எனக்கு கிடைத்த பெரிய ஊக்கம் நண்பரே...
ஒரு நாள் இந்த பள்ளிகளையும்,கல்வி முறையை மாற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எவனோ ஒருவன் said...

@ ஆராய்வு
//
தமிழிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).
//
நான் தமிழிஷில் இணைந்ததே மற்றவர்கள் என் இடுகையை வாசித்து கருத்துரையிடவே ? என்னை நிந்திதோ அல்லது வாழ்த்தியோ ...
ஆனால் மாறாக எனக்கு வோட்டு விழுகிறது, ஏனோ கருத்துரையிடுவதில்லை பலர்.
தாங்கள் எனக்கு வோட்டு அளிக்க வில்லையென்றாலும் கருத்துரையிட்டாலே எனக்கு பெரிய விடயம்.