Wednesday, March 24, 2010

மனச்சூழல் மாசுபாடு

 நான் எனது இளங்கலை இறுதியாண்டு படித்து கொண்டிருந்தேன். நான் உயிரியல் மாணவன் என்பதால்
எனக்கு உயிரியல் தொடர்பான எந்த பிராஜக்ட் கிடைத்தாலும் அதை செய்ய முனைப்பாக இருந்த காலம்
அது.

அந்த சமயம் C.P.Ramasamy Ayyar Educational trust என்னும் Non-Profit Non-Governmental  Organization ஒரு அமைப்பு
சுற்றுசூழல் மாசுபாடு குறித்து ஆய்வறிக்கை செய்ய எங்கள் கல்லூரியில் பயிலும் உள்ள இதில் ஆர்வம் உள்ளவர்களை தொடர்பு
கொள்ள சொன்னார்கள்.
 நானும் என் வகுப்பு மாணவர்களும் நாங்கள் விலங்கியலுடன் கூடிய உயிர் தொழிநுட்பவியல் மாணவர்கள் , உயிர்வேதியல் மாணவர்களும் சிலரும் அந்த சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த ஆய்வை செய்வதில் உதவ தலைபட்டோம்.

எங்களது வேலை நமது வளி மண்டலத்தில் எவ்வளவு தூசு , Sulphur-Di-Oxide ( So2 ) , Nitrogen-Di-Oxide (No2) இருக்கிறது என்பதை கண்டறிய High Volume Sampler  என்ற கருவியை பயன்படுத்தினோம்.
இது போக ஒரு நாளில் எத்தனை இரு சக்கர, நாலு சக்கர வாகனங்கள் செல்கின்றன என்றும் கணக்கு எடுத்து கொண்டு இருந்தோம்.

இந்த ஆய்வு மதுரையில் மூன்று இடங்களில் செய்தோம். இது பெரும்பாலும் ஜனநடமாட்டம், வாகனங்கள் அதிகமாக செல்லும் இடங்களில் செய்யலாம் என்று தேர்ந்தெடுத்தோம்.
முத்லில் பெரியார் நிலையம் எதிரே உள்ள தீயணைப்பு நிலையம் அருகே அமர்ந்து முதல் நாள் வேலை நடத்தினோம்.

இரண்டாம் நாள் யானைக்கல். சிம்மக்கல்லில் உள்ள இடம் அங்கே காய்கறிகள், பழங்கள் விற்பார்கள்.

மூன்றாம் நாள் கோரிப்பாளையம்.
அந்த High Volume Sampler என்ற கருவியை இயக்க மின்சாரம் தேவைப்பட்டது . முதல் இரண்டு நாட்களும் எந்த பிரச்சனையும் இன்றி எங்களுக்கு மின்சாரம் கிடைத்தது.

மூன்றாம் நாள் கோரிப்பாளையத்தில் ஆய்வு செய்ய எங்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள கடைகளில் ஏதாவது ஒரு கடையில் மின்சாரம் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி கேட்க இரண்டாம் வேலை முடிந்தவுடன் சென்றோம்.

ஆனால் ஒரு கடையில் கூட எங்களுக்கு மின்சாரம் கிடைத்தபாடில்லை.இத்தனைக்கும் அந்த மின்சாரத்திற்கு ஆகும் பணத்தை தருவதாக அமைப்பை சார்ந்தவர் தருவதாக சொன்னார்.

நீங்கள் கேட்கலாம் சட்டபடி மின்சாரத்தை வெளியே விற்பது தவறில்லையா என்று ? இது ஒரு அரசு சார்ந்த, அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்பதால் இதில் எந்த சிக்கலும் இல்லை என்று எங்களுடன் வந்த அந்த அமைப்பு சார்ந்தவர் சொன்னார்.

நாங்கள் இந்த விவரங்களை விளக்கி சொல்லியும் யாரும் எங்களுக்கு செவி சாய்க்கவில்லை.  
நான் என் நண்பர்களும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம். பலனில்லை.

பின் நாங்கள் ஒரு சிறிய கடை சொல்ல போனால் அந்த வரிசையிலே அது தான் சின்ன கடை எனலாம். அதில் அம்மா இருந்தார்கள்.
எல்லா விவரங்களையும் விளக்கி சொன்னேன். எதுவரையில் என்றாலும் இந்த ஆய்வறிக்கையால் நமக்கு ஏதோ வகையில் நல்லது நடக்கும் என்று. வேறு சட்டப்படி இது தவறில்லை, இது அரசுக்காக செய்யப்படும் ஆய்வறிக்கை என்றெல்லாம் நான் சொல்லவே இல்லை.

நாங்கள் மற்றவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏதும் செய்ய சொல்லவில்லையே. எல்லாம் தெளிவாக விலக்கிய பின்னும் இந்த நிலைப்பாடு வருத்ததிற்குரியது.
 "எதுக்குப்பா வம்பு " என்ற போக்கு நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுமோ என்ற அச்சம் தொனிக்கிறது.
 நாம் தனித்தீவுகளாக வாழ ஆரம்பித்துவிட்டோம்.

 நாம் நம்மை போல் பிறரையும், பிறரின் நலனையும் சற்று சிந்திக்க வேண்டும்.
Sustainable Development என்று சொல்வார்களே அதற்கேற்றார்போல் வாழ வேண்டும்
மனிதர் மனச்சூழல் மாசுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது இல்லை இல்லை மாசுபட்டுவிட்டது.
இந்த மனிதர் மனச்சூழல் மாசுபாட்டை சரி செய்தால் சுற்றுசூழல் மாசுபாடு என்ன சமூகத்தில் நிலவும் பிரச்சனையும் தீர்த்துவிடலாம்.
இந்த இடுகையில் எந்த சந்தேகமின்றி எங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அந்த மூன்று நாட்களிலும் எங்களுக்கு மின்சாரம் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

2 கருத்துக்கள்:

Unknown said...

இந்த சமுகம் கள்ளசாமிகளிடம் தான் போய் திருந்த வேண்டும் .

அந்த அம்மா நல்லவங்க

மதுரை சரவணன் said...

ஆம்! நம் மனம் மாசுப்ப்ட்டு உள்ளது. அதனால் தான் இயற்க்கை மாசுப்பட்டு கொண்டுள்ளது. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்