Tuesday, May 18, 2010

ராட்டினம்

தொலைக்காட்சியில் அந்த தீம்ப் பார்கின் விள்ம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
Giant Wheel, Roller Coaster  அப்புறம் இன்னும் எவ்வளவோ காண்பிக்க ,
நான் இந்த மாதிரி இடங்களுக்கு பள்ளியில் செல்ல எவ்வளவோ முறை வாய்ப்பு வந்த போது நான் தவிர்த்தே வந்தேன்.

எனக்கு ஒரு 7 வயது இருக்கும். அப்ப எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க ஒரு சின்ன கோவில்ல சின்ன ராட்டினம் கொண்டு வந்திருந்தாங்க. அந்த ராட்டினம் ரொம்ப பெரிசில்லாம் இல்ல.
அதுல இருந்த இருக்கை தொட்டில் போல் இருந்தது, ஒவ்வொரு இருக்கையிலையும் ரெண்டு பேர் இருக்கலாம்.

அனுமதி கட்டணம் 25 பைசா. எங்கிட்ட காசு வேற இல்ல.
அந்த ராட்டினத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். ராடினத்த ஓட்டிட்டு வந்த அந்த தாத்தா ஒரு சில இருக்கையில ஆட்கள் இல்லன்னு balance க்கு வேடிக்கை பார்த்துகிட்டிருந்த என்ன பார்த்து "ஏறிக்கிறியா" ன்னு கேட்டார். " என்கிட்ட காசு இல்ல " அப்படின்னே ,
 அவரு ஒண்ணு சொல்லாம என்ன தூக்கி ஒரு இருக்கையில உக்கார வச்சிட்டாரு.

காசு குடுத்து ஏறிய என் நண்பர்கள் சிலருக்கு ஒரு வகையான எறிச்சல். இது யாருக்கும் ஏற்படுவது தான்.
நானும் சும்மா இல்லாமல் முதல் சுற்று ஆரம்பித்தவுடன் சிறு சத்தம் கொடுத்தேன் அவர்களுக்கு கேட்கும் அளவு.

அது மாலை நேரம்...அன்னைக்கு தான் நான் வாழ்க்கையில முதல் முறையா ராட்டினம் போறேன்.
கடைசியாவும் போனேன்.

முதல் சுத்து முடிஞ்சவுடனே ரெண்டாவது சுத்துல வேகம் கூடுச்சு.

ரெண்டு சைடு உள்ள கம்பிய புடிச்சிகிட்டேன்.
ரெண்டு முடிஞ்சு மூணாவது சுத்துல

கம்பிகள நான் இருக பற்றிகொள்ள ஆரம்பித்தேன்.

அடுத்த சுற்றுகளில்..
நான் கொஞ்சமா கொஞ்சமா நிலை குலைய ஆரம்பிச்சேன்.

கண்கள் ரெண்டும் இருட்டிக்கிட்டு வந்தது.
என் பக்கத்தில ஒரு பொண்ணு உட்கார்ந்திருந்தது. "ஆனா அதுக்கு ஒண்ணுமே ஆகலயே ? "ன்னு அப்ப ஆச்சரியப்பட்டேன்.

அந்த பொண்ணு என்னோட எப்படியும்  4 வயது கூட இருக்கும்.

நான் ஒரு மாதிரி நிலைகுலையிறேன், நான் ஒண்ணுமே கேட்காமலே என் தலைய அவங்க மடியில சாச்சுகிட்டாங்க, என் பக்கத்தில அமர்ந்தவங்க,அந்த அக்கா.

நான் அப்படி கண்ண மூடிட்டேன்.
ராட்டினம் எத்தன தடவ சுத்துச்சு, எவ்வளவு வேகமா சுத்துச்சு எதுவுமே எனக்கு தெரியாது.. ராட்டினம் நின்னவுடனே என்ன எழுப்பிவிட்டு பத்திரமா இறக்கிவிட்டாங்க...

என் முகத்த பார்த்தவுடனே நான் சரியாக ( I am no normal ) இல்லை அப்படிங்கறது அவங்க எப்படி உணர்ந்தாங்க ?
இல்லாட்டி நான் அங்க இருந்து கீழ விழுந்திருப்பேன்.

 அந்த சகோதரி எங்க இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்கள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும்...

சகோதரி என்ற சிலருக்கு சிரிப்பை தருமின் நான் அன்று யோசிக்கவில்லை, கவனிக்கவில்லை தப்பிக்க மட்டும் செய்தேன். அதற்கு ஒரு வகையில் என்னைவிட புத்திசாலித்தனமாக முடிவெடுத்த அவர் தான் காரணம்.

இந்த சம்பவத்திலிருந்து நான் எந்த ராட்டினத்திற்கும் சரி, தீம் பார்க்கும் சரி போரதப்பத்தி யோசிக்கிறதே இல்லை.
 சாதாராணமா ராட்டினத்த பார்த்தா கூட தலைசுற்றுவது மாதிரி ஒரு மனக்கற்பனை

சில பேர் இத Megalophobia -  பெரிய பொருட்களினால் வரும் பயம் என்றனர். எனக்கு அதன் உருவம்
பார்த்து என்றுமே பயம் வந்ததில்லை. அதன் சுழற்சிதான் சிறிது டரியலாக்குகிறது.

எனக்கு தெரியவில்லை ராட்டினத்தில் சுழலும் போது ஏற்படும் பயமா ? இல்லை
என் அருகில் ஒரு கரமோ, மடியோ கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயமா ?
அதனாலோ என்னமோ நான் இன்று வரை ராட்டினம் ஏறியதில்லை.


அந்த காசு வாங்காத ராட்டின தாத்தா, பக்கத்தில் அமர்ந்த அக்கா இருவரையும் நினைத்து பார்க்கிறேன்.

5 கருத்துக்கள்:

ஹுஸைனம்மா said...

ஐயோ, ஸேம் பிளட்டுங்க!! எனக்கும் இந்த மாதிரி ராட்டினம் இன்ன பிறவெல்லாம் பயம். (சுத்துற சுத்துல நட்டு கழண்டுடுமோன்னு பயம்னு கூடச் சொல்லலாம்னு என்னவர் சொல்வார்!)

:-)))

அந்த அக்கா மிகவும் பாராடப்பட வேண்டியவர்தான்!! இத்தனைக்கும் நீங்க சொல்றதப் பாத்தா, அப்ப 10 -12 வயசுதான் இருக்கும் போல!! அப்பவே இவ்வளவு அன்பான்னு ஆச்சர்யம்!!

Prabhu said...

டேய், அது வேகமா மேலே போய் இறங்கும் போது வரும் கிறுகிறுப்புதான் போதையே! செமையா இருக்கும். ஆனால் நானும் 2,3 முறைகளே போயிருக்கேன்.

Prabhu said...

பைதிவே இஸ் நாட் இட் அ ராட்டினம்?

எவனோ ஒருவன் said...

@ ஹூசைனம்மா
உங்களுக்குமா ?ன்னு கேட்கும் போது சந்தோசமில்ல ஒரு வகையான தைரியம் வருது. நம்மல மாதிரி நிறைய பேர் இருக்காங்களேன்னு நினைச்சு.

//
அந்த அக்கா மிகவும் பாராடப்பட வேண்டியவர்தான்!! இத்தனைக்கும் நீங்க சொல்றதப் பாத்தா, அப்ப 10 -12 வயசுதான் இருக்கும் போல!! அப்பவே இவ்வளவு அன்பான்னு ஆச்சர்யம்!
//
நன்றி

எவனோ ஒருவன் said...

@ pappu
// டேய், அது வேகமா மேலே போய் இறங்கும் போது வரும் கிறுகிறுப்புதான் போதையே

இப்போ புரியுது அங்க இவள கூட்டம்

// பைதிவே இஸ் நாட் இட் அ ராட்டினம்

நான் சில தளங்கள பார்த்தேன், சிலவை ராட்டிணம் என்றும் சிலவை ராட்டினம் என்றும் எழுதியிருக்கிறது.
தமிழ தப்பா எழுதாம இருக்க முயற்சி பண்றேன்.ராட்டினம் சரி என்றால் தெரிவிக்கவும். நான் மாத்திடுறேன்.
your que is rhetorical .,that's why