Monday, June 28, 2010

இளமையாகவே இருப்பாய்

7.6.2010 அன்று காலை 2 மணி 50 நிமிடங்கள் இருக்கும் , என் செல்பேசி பாடல் " Main hoon don  " ஒலித்தது,
என் நண்பன் ரமேஷ் பாபு அழைத்தான். எரிச்சலோடு பேச முனைந்தேன்.

ரமேஷ் " எங்கடா இருக்க ?" கேட்டான்.

"இப்ப எங்கடா இருப்பேன் ? வீட்ல தான் "ன்னு சொன்னேன்.

ரமேஷ் " அஜய் செத்திட்டான்டா " அப்படின்னு சொல்லிட்டு வச்சிட்டான்.

ஏன் ? எப்படி ? கேட்டதுக்கு ஏதோ மின்சார விபத்து சொன்னான்.

அப்போது தண்ணீரிலிருந்து அவனுக்கு மின்சாரம் அவன் உடலுக்கு பாய்ந்ததாக கேள்வி.
6.6.2010 அன்று அவன் உயிர் பிரிந்திரிக்கிறது
அந்த விபத்தை பற்றி என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.
அஜயின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது.
அஜயிக்கு 21 வயது தான் இருக்கும். நானும் அவனும் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் படித்தோம்.அந்த நாட்களில் நானும் அவனும் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தோம்.
ஆனால் அவனது கடைசி நாட்களில் நானும் அவனும் அவ்வளவு நெருக்கமல்ல.
........
பள்ளியில் prayer ல உயரப்படி நிற்கவைப்பாங்க, அதனால அவந்தான் முதல்ல நிப்பான், அவனுக்கு அப்புறம் நான் நிப்பேன். அவன் முதல்ல நிக்கிறது தன்னோட உயரத்தை கேலி செய்வதாக அவன் உணர்ந்தான், அப்போது. எனக்கும் அவனுக்கும் முதலில் நிற்க கூடாது என்பதில் ஒரு சின்ன போட்டியே நடக்கும்.பெரும்பாலான நேரங்களில் நானே ஜெயித்து அவனை முதலில் நிப்பாட்டி இருக்கிறேன்.

கீழே prayer முடிந்ததும் மேலே மாடியில் வகுப்புக்கு செல்வோம்.கீழே வெயிலில் வேர்த்துக் கொண்டிருக்கும் வேகமாக படியில் ஏறுவோம், எதற்கு என்றால் நானும் அவனும் படித்த ஆறாவது வகுப்பு அறையில் பயிலும் போதெல்லாம் அந்த ஜன்னல் ஓரமாக தான் நானும் அவனும் உட்கார்ந்திருப்போம்,
அந்த ஜன்னல் வழியே 'ஜில்'லன்ற காற்று வரும். வெயிலின் வேர்வைக்கு இதமாக அந்த ஜன்னல் ஒரமான இடத்திற்கு போட்டி போடுவோம்.என் வகுப்பு ஆசிரியை யார் யார் எங்கு அமர வேண்டும் உறுதி செய்வார். இதிலும் பல சமயம் நான் தான் ஜன்னல் பக்கம் அமருவேன்.

அப்புறம் ஒரு தடவை விளையாட்டு போட்டியில் நானும் அவனும் சேர்ந்து ஒரு பந்தை நெற்றியில் வைத்துக் கொண்டு வேகமாக ஓடி பரிசு வாங்கினோம்.
இவ்வாறு அவனோடு எனக்கு இருந்த நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது ....

ஆனால் நானும் அவனும் +2 படிப்பும், கல்லூரி படிப்பும் வெவ்வேறு இடங்களில் படித்தோம்.
எப்போதாவது பார்த்துப் பேசிக் கொள்வோம்.

ஆனால் அவன் என்னோடு பேசிய காலங்களை வைத்தும் பேசிய விசயங்களை வைத்தும் அவனிடம் ஒரு insecurity இருந்திருக்கும் என்று இப்பொழுது உணருகிறேன். ஆனால் அவன் எப்போழுது ஆளுமை செய்வதில் மிக கவனம் செலுத்துவான்.
இன்னும் சரியாக சொன்னால் தன்னை தாழ்வாகவோ, பொருட்டாக எண்ணாமல் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அவன் இருந்த காலங்களில் அவன் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட அவன் விட்டு சென்ற இடம் பன்மடங்கு ஏற்படுத்திவிட்டது. அவன் இறந்தபிந்தான் அவன் செய்த சின்ன தவறுகள் கூட நினைவுகளாயின, அவன் அடித்த ஜோக்குகள் மீண்டும் மீண்டும் சொல்லும் போது அவன் இருக்கிறானோ என்றுகூட தோண்றியது.

இல்லாமையும் மேன்மை தருகிறது இங்கே.


"நண்பா, எங்களுக்கு என்றோ தெரியவில்லை
ஒரு வேளை நரம்பு தளர்ந்து சாகும் நேரம் வந்தால்கூட
 நாங்கள் மூத்திருந்து, தலை நரைத்திருந்தாலும்
எங்கள் நினைவுகளில் வாழும் நீ இளமையாகவே இருப்பாய்
எங்களுடன் "


 


மரணங்களில் என்றும் கண்களில் கண்ணீர் வந்தது இல்லை.
அன்றும் வரவில்லை.
ஆனால் அவனிடம் ஒரு தடவையாவது பேசியிருக்கலாமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன்.


அன்று தான் ஆட்டோகிராபில் வந்த  " முதன் முதல் அழுகை சினேகிதன் மரணம் " என்ற வரியின் கணம் புரிந்தது.

யாரையாவது இழந்தால்தான் நாம் ரொம்ப தத்துவமாக யோசிக்க, பேச ஆரம்பிக்கிறோம்.
நான் இந்த பதிவு செய்ய ஒரு மாதம் எடுத்ததற்கு காரணம் அதுதான்....

2 கருத்துக்கள்:

ஹுஸைனம்மா said...

நட்பின் இழப்பு வலிமிகுந்ததுதான். அதுவும் வெகு நாட்கள் பேசாமல் இருந்தால் மிகவும் குற்றவுணர்வும் இருக்கும்.

'BULL'et மணி said...

@ஹூசைனம்மா
நிச்சயமாக...
மரணம் யாருக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை தருகிறது...