Tuesday, August 3, 2010

அவள் அப்படியல்ல

என் கல்லூரி நாட்களில், அறிவியல் மாணவன் என்பதால் ஆய்வுகூடங்கள்ல வாரத்தில் பாதி நேர கழிக்க வேண்டியிருக்கும்.
எங்கள் கல்லூரியில் இளங்கலையில் மாணவர்கள் மட்டும் தான். மாணவிகள் என் வகுப்பில் இல்லை.

" ஓன்லி ஜென்ட்ஸ் " அப்படி ஒரு க்ளிஷே எங்களுக்கு பொருந்தும்.

ஆய்வுகூடங்கள்ல எங்களுக்கு குறைஞ்சது 4-6 மணி நேரம் தேவைப்படும். ரிசல்ட் கொண்டு வர . இதுல மொத்த நேரமே 4 மணி நேரம்தான்
இதில் வேடிக்கை என்னன்னா பாதி நேரம் சில ஆசிரியர் எங்களுக்கு நல்ல விஷயம் சொல்றதா நினைச்சிகிட்டு பாதி நேரத்தில கருத்துரை வழங்கிடுவாங்க.

எங்க விட்டாலும் கடைசியா " ரிசல்ட் கொண்டு வந்துருங்க " அப்படின்னு கூலா சொல்லிட்டு போயிடுவாங்க.
ஆனா இந்த மாதிரி கருத்து பேசும் போது ஓவ்வொருத்தரும் ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணிவோம்,

ஆனா அன்னைக்கு ஒரு நாள் ஆசிரியர் தன்னோட ஒரு கருத்த சொன்னார். எங்க வகுப்புல இருக்க  எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் ரியாக்ட் பண்ணினாங்க இன்னும் சொல்ல போனா என்னோட juniors கூட அப்படித்தான் ரியாக்ட் பண்ணினாங்க.

அப்படி அவர் என்ன சொன்னார்னா அவர் தன்னோட மனைவியை விட இறைவனை தான் அதிகமாக நம்புவதாக சொன்னார்.
அவர் சொன்ன கருத்துக்கு பயங்கரமான கண்டனம் எல்லாரிடமும் ஒருமித்து இருந்தது.
இந்த கருத்தோ , நம்பிக்கையோ நல்லோழுக்கங்கள், மானம், வீரம் இவற்றிற்கு இழுக்கு என்று கருதினோம்.

அப்பொழுது அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட .ஆனால் இப்பொழுது சிந்தனை வேறாக இருக்கிறது.

சாதாரணமாக இறைமறுப்பாளரின் பார்வையில் பார்க்கும் போது உருவாகும் கருத்துக்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
மூன்றாம் தர இறைமறுப்பாளர்கள் ஏதோ இறை நம்பிக்கை உள்ளவர்கள் அறிவில்லாதவர் என்று நினைத்து கொண்டு பேசுவாங்க.கேட்டால் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போர்க்கொடி அப்படிம்பாங்க. Fantasy க்கு I Believe in No God and No God is Universal இப்படி தத்துவம் பேசுவாங்க.
இதே போல இறை நம்பிக்கை உள்ளவர்களிடமும் ஒரு fantasy உண்டு.

அடுத்தவன நிர்ணயிக்கறதிக்கே ஒரு கூட்டம் இல்ல இல்ல பல கூட்டம் இருக்கு.
நான் இதப்பத்தி பேசுனா ரெண்டு கூட்டத்துல ஏதாவது ஒண்ணுல என்ன சேர்த்துவாங்க. எனக்கு
இறைமறுப்பாளர் பார்வை வேண்டாம், இறைநம்பிக்கையுடைவர் பார்வையும் வேண்டாம்.

அவர் சொன்ன அந்த கருத்த நானும் எதிர்த்தேன்.
இப்ப மாத்தி யோசிக்க நினைக்கிறேன்.
இந்த கருத்த நம்மல்ல பெரும்பாண்மையானவங்க எதிர்ப்போம். ஏன்னா மனைவி என்பவள் கற்பு. என்பதனை காத்து நம்ம கலாச்சாரம்...கலாச்சாரம் சொல்லற ஒன்ன காப்பாத்தறா அப்படின்றோம்.

இதவே அந்த கருத்தை கொஞ்சம் மாற்றி காதலிகளை இல்ல பெண்கள நம்ப கூடாது என்று சொன்னால் இதற்கு முன் சொன்ன க்ருத்துக்கு கண்டனம் தந்தவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பார்களா என்றால் சந்தேகம் தான்.
பலருக்கு தான் காதலிக்கும் பெண் எப்போதும் தன் பக்கம் நிற்பாள் என்பது சந்தேகம்தான்.
" கொஞ்ச அப்பா அம்மா கண்ண கசக்குனா நம்மள விட்டுருவாபா". இதை பலர் என்னிடம் சொல்ல கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம்.

கிறுக்குத்தனமான பழமொழி சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பொண்ணை நம்பாதே. என்ன ஒரு இடியாட்டிக்கான சிந்தனை
இப்பொழுது காதலிகள நம்பக் கூடாது எங்கிற
இந்த கருத்து மிகப்பெரிய விகர்ப்பானதாக யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் இருந்தும் மனைவியும் ஒரு பெண் , காதலியும் ஒரு பெண்.
ஒரு பெண் சமூகம் தரும் அங்கீகாரம் கிடைத்த பின் நம்பத்தகுந்தவள் ஆகிறாள் இன்னும் சொல்லப் போனால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செல்கிறாள்.
அப்படி சந்தேகப்படுபவன் காப்பியங்களில் வரும் கடவுளாக இருந்தால் கூட நாம் சிறிதும் கூட அஞ்சாமல் விமரிசிப்போம் .
அப்படி இல்லாதவர் நம்பத்தகுந்தவர் இல்லாமல் போக நேரிடுகிறது சில நேரங்களில்.

காதலிக்கும் மனைவிக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது ? மாங்கல்யக் கயிறு.
எல்லாரையும் நம்புங்கள் என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் இந்த தாலி யாருக்கோ வாரண்டி கார்டு போல் இந்த மனிதர்களையும் தாண்டி நிற்கிறது.


அப்ப மாங்கல்யம் வேண்டாமா என்றால் அது அவரவர் விருப்பம் நான் இங்கே சொல்ல வருவது ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு பாட்டி, ஒரு அத்தை, ஒரு சித்தி என்று இந்த உறவுகளில் ஒரு நம்பிக்கையுள்ளவள் ஆகிறாள்.

இன்னும் சொல்லப்போனால் அவள் ஏன் ஒரு ஆணுக்கு மட்டும் நம்பிக்கையுடைவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறோம்.
எனக்கு இப்படி மேலே எழுதிய வரிகள் கூட எனக்கு சிறிது Male chauvnisடிக் தோணியை தருகிறது என்று தோண்றுகிறது.
ஆனால் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா இல்லை இதற்கு ஆண்களுக்கு கல்வி தரவேண்டுமா நம்மை சுற்றிய சமூகப் பார்வைக்கு ஒரு மாற்று பார்வை தர வேண்டுமா இல்லை ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் வேலையிலும் உறவுகளிலும் உண்மையான அன்பையும் நேர்மையும் தர தயார்படுத்த வேண்டுமா ?

எனக்கு தெரியவில்லை இது பல விடை இருக்கும் கணக்கு போல இருந்தும் எனக்கு இதில் ஒரு விடை கூட எனக்கு புலப்படவில்லை. 
இது எண்ணங்களின் சிதறல்கள்...

0 கருத்துக்கள்: