Tuesday, January 11, 2011

திருமணம் ஆகாமல்

அது அழகிய சனிக்கிழமை மாலை நேரம். அந்த ஊரில் அது மிகவும் பிரபலமான விளையாட்டு
திடல் என்று சொல்லலாம்.சிறுவர், சிறிமியர், இளைஞர்,இளைஞிகள், வயதானோர்
என அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வார நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏனோ இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாக
தொற்றிக் கொள்கிறது.
எல்லாரும் கடந்த வாரக் கவலைகளையும், வரும் வாரத்தில் வரவிருக்கும்
பிரச்சனைகளை மறந்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் காவல் துறையில் சேருவதர்க்காக பயிற்சி எடுத்துக் கொண்டு சிலர்,
மாநில, தேசிய அளவில் விளையாட்டில் சோபிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு சிலர்,

அப்போது ஒரு கணவன், மனைவி கைகோர்த்துக் கொண்டு நடைப் பயிற்சி  செய்து
கொண்டிருந்தனர். அந்த மனைவி கருவுற்றிருந்தாள்.முதல் முறை ஈன்றெடுக்கிறாள்
என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவர்கள் இருவரும் ஏதோ காதில் சொல்லி
சிரித்துக் கொண்டனர். முதல் முறை ஒரு பெண் கருவுற்றபோது உள்ள பூரிப்பு
அவளிடம் தெரிந்ததை விட அந்த கணவனிடம் தான் தெரிந்தது.

அந்த பெண் பச்சை புடவை அணிந்திருந்தாள். கணவன் வயலெட் நிறத்தில் டீ சர்ட்
அணிந்திருந்தான். அந்த பெண் மாங்கலயமும், ஒரு சங்கிலியும் அணிந்திருந்தாள்.
இவர்கள் இருவரும் ஒருவரது ஒருவர் கைபிடித்து நடந்து சென்று கொண்டிருந்தனர்,
பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால்
ஒரு வேலை இது போல் ஒரு பெண் கருவுற்றிருந்து ஆனால் கழுத்தில் மாங்கல்யம்
இல்லை அதாவது திருமணம் ஆகாது நிலையில் , சமூகம் என்னும் நாம் இவர்களுக்கு
தரும் பெயர் என்ன?
அப்படியொரு பெண்ணிருந்தால் தன் பெயர் கலங்கப்படாமல் காத்துக் கொள்ள
அந்த சிறு உயிரை உருவாக்கியவரை ஊருக்கு சொல்லியிருப்பாள்
அல்லது இவ்வளவு மோசமான உலகத்தில் தன் குழந்தை வாழ வேண்டாம் என்று
தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு எப்பொழுதோ அந்த சின்ன உயிரை
கொன்றிருப்பாள்.

இவற்றிக்கெல்லாம் மேல் அந்த பெண்ணை எல்லா அவமானங்களை தாங்கிக் கொண்டு
அந்த குழந்தையை பெற்றெடுக்க உந்து சக்தியாக இருப்பது எது.?

என் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது...
    

உணர்வு ரீதியாக சிந்திக்கையில் அது வரை அர்த்தமின்றி இருண்டு இருந்த
வாழ்க்கைக்கு இந்த பிஞ்சு குழந்தை பின்னாளில் வளர்ந்து தன்
அர்த்தமாக இருப்பானோ என்று அவள் நம்பிக்கையான எதிர்காலத்திற்காக
காத்திருக்கலாம்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஒரு பெண் தாயாக இருக்கும் போது தான் புத்திசாலி
இருக்கிறாள் அவள் கன்னியாக இருக்கும் போது ஒப்பிடுகையில். இது திருமணமோ
அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயமல்ல, ஒரு ஈன்றெடுக்கும் வேலை நடக்கும்
உடற்கூறியல் மாற்றங்கள்...ஹார்மோன்ஸ்..
எப்படி சிந்தித்தாலும் ஒரு உயிரை இங்கே கொண்டு வருவது என்ற காரியந்தான்
பரிணாம வளர்ச்சியின் முதல் படி.

இப்படி ஒரு எவ்வளவு மனத்தைரியம் கொண்டு இருந்தாலும் சமூகம் முடிந்தவரை
அவளையும் அந்த குழந்தையும் முடிந்தவரை சுட்டு பார்த்துவிடுகிறது.
என்னை கேட்டால் இந்த நிலைக்கு எந்த பெண்ணையும் நாம் தள்ளாமல் இருந்தால்
அதுவே போதும் என்பேன்.

0 கருத்துக்கள்: